முதல்வர் பதவியேற்க இருக்கும் ஸ்டாலினுக்கு மாஸ் நடிகர் வேண்டுகோள்!

திரையுலக பிரபலங்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏஆர் ரகுமான் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 3, 2021, 02:34 PM IST
முதல்வர் பதவியேற்க இருக்கும் ஸ்டாலினுக்கு மாஸ் நடிகர் வேண்டுகோள்! title=

Tamil Nadu Assembly Election 2021 Results: தமிழகம் உட்பட நான்கு மாவட்டங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. இன் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்னும் ஓரிரு நாளில் தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

இதனை அடுத்து (M K Stalin) அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தேசிய கட்சியின் தலைவர்கள், பிற மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திரையுலக பிரபலங்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏஆர் ரகுமான் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது:

மிக முக்கிய தருணத்தில், தமிழக முதல்வராகும் திரு. ஸ்டாலின் அவர்கள், நமது தனிப்பெரும் அடையாளங்களான சமூக நீதி, மத நல்லிணக்கம்,கல்வி, மருத்துவம், சுகாதாரத்தோடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து,மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். 

 

 

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News