தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்திகை தீபம்: 


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா தெரியாமல் ஷவரை திறந்து நனைந்து விட கார்த்திக் தனது துணியை கொடுக்க தீபா அதை அணிந்து கொண்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


மேலும் படிக்க | மாரியின் பிறப்பு ரகசியத்தை உடைத்த சூர்யா.. கடுப்பான தாரா - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்


அதவாது, எல்லாரும் ஒன்றாக அமர்ந்து ப்ரேக் பாஸ்ட் சாப்பிட தீபா ஸ்போர்க் ஸ்பூனில் சாப்பிட தெரியாமல் தடுமாற எதிரே அமர்ந்து இருக்கும் கார்த்திக் எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்லி கொடுக்கிறான், ஆனாலும் அது புரியாத தீபா இட்லி, தோசையை போய் எதுக்கு இப்படி சாப்பிடணும் என்று முடிவெடுத்து கையால் சாப்பிட அதை பார்த்து மற்றவர்களும் கையால் சாப்பிட தொடங்குகின்றனர். 


அதன் பிறகு மீனாட்சி இந்த புடவையில் நீ சூப்பரா இருக்க, கார்த்திக் உன்னையே தான் பார்த்துட்டு இருந்தான் என்று சொல்ல தீபா அட போங்க அக்கா அவர் என்னை பார்க்கவே இல்லை என்று சொல்ல நீ வேணும்னா பாரு கார்த்திக் உன்னை குறைந்தது மூணு முறையாவது திரும்பி பார்ப்பான் என்று சொல்கிறாள். அதற்கேற்றார் போல கார்த்திக் ரெண்டு முறை பார்த்து விட தீபா மூன்றாவது முறை திரும்பி பாருங்க சார் என்று மனதுக்குள் வேண்ட கார்த்திக்கும் திரும்பி பார்க்க தீபா சந்தோஷமடைகிறாள். 


அடுத்து சிதம்பரம் தீபாவுக்கு போன் செய்து என்ன எல்லாரும் குடும்பத்தோட சந்தோசமா இருக்கீங்க போல், என்னுடைய ஆளுங்க உங்களை கவனிச்சிட்டு தான் இருக்காங்க. நீ எனக்காக வந்து பாடி கொடுத்தா உங்களை கஷ்டப்படுத்த மாட்டேன். நீ வந்து பாடி கொடுத்து தான் ஆகணும் என்று மிரட்ட தீபா முடியாது சார் என்று சொல்கிறாள். அதன் பிறகு செல்பி பாட்டி எல்லாரும் எப்பயாவது தான் இப்படி ஒண்ணா சேர்ந்து வெளியே வரோம். ஜாலியா என்ஜாய் பண்ண வேண்டாமா? ஏதாவது போட்டி நடத்தலாம் என்று சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். 


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?


கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்க பிளான் போடும் சுரேஷ்! சந்தியா ராகம் எபிசோட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ