தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோட்


 தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரியா மீனாட்சியை கடத்தி அடைத்து வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


மீனாட்சியை காப்பாற்றும் கார்த்திக்


அதாவது, கார்த்திக் மீனாட்சியை அடைத்து வைத்திருக்கும் இடத்தை கண்டுபிடித்து ரவுடிகளுடன் சண்டையிட்டு காப்பாற்றி வெளியே அழைத்து வருகிறான். 


மறுபக்கம் மண்டபத்தில் பரமேஸ்வரி வந்திருக்க எல்லோரும் ஜோடி ஜோடியாக ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என முடிவு செய்து தயாராக ரியா ஆனந்தத்துடன் சேர்ந்து ஆசிர்வாதம் வாங்க தயாராகிறாள்.


ரியாவுக்கு பேரதிர்ச்சி  


பரமேஸ்வரி பாட்டி ரியாவை பார்த்து யார் இது என்று கேள்வி எழுப்ப தீபா அது ஆனந்த்தோட ஃப்ரெண்ட் என பிளேட்டை மாற்றி விட ரியா எதுவும் பேச முடியாமல் போகிறது. அதன் பிறகு கார்த்திக் மீனாட்சியுடன் மண்டபத்திற்கு வந்து விட ரியா பேரதிர்ச்சி அடைகிறாள். 


இதை தொடர்ந்து கார்த்திக், தீபா ஆனந்தை தனியாக அழைத்து சென்ற ரியா மதுவிடம் பேசிய வீடியோவை காட்டி அவளை பற்றிய உண்மையை உடைக்கின்றனர். பரமேஸ்வரி பாட்டி இருப்பதால் இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம் எனவும் சொல்ல ஆனந்த் அமைதியாக வெளியே வருகிறான். 
பிறகு அருண் - ஐஸ்வர்யா, ஆனந்த் - மீனாட்சி மற்றும் கார்த்திக் - தீபா ஆகியோர் ஜோடி ஜோடியாக காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகின்றனர்‌. 


மேலும் படிக்க | Bhairava Anthem: பிரபாஸின் “கல்கி 2898 கி.பி” படத்தின் முதல் பாடல் வெளியீடு


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?


கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | ‘குட் நைட்’ பட இயக்குநருக்கு தங்க சங்கிலியை பரிசளித்த சிவகார்த்திகேயன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ