‘குட் நைட்’ பட இயக்குநருக்கு தங்க சங்கிலியை பரிசளித்த சிவகார்த்திகேயன்!

Actor Sivakarthikeyan : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கும் சிவகார்த்திகேயன், குட் நைட் பட இயக்குநரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருக்கு கோல்ட் செயின் ஒன்றையும் பரிசாக வழங்கினார். 

Actor Sivakarthikeyan : கோலிவுட்டில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகராக உயர்ந்த இவர், இப்போது தமிழ் திரையுலகின் பெரிய நடிகராக விளங்குகிறார். இவருக்கு சில நாட்களுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், குட் நைட் படத்தின் இயக்குநர் விநாயக் சந்திரசேகரனுக்கு சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட அவர், தங்க சங்கிலியை பரிசாக அளித்தார். 

1 /8

குட் நைட் பட இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் திருமண வரவேற்பில் சிவகார்த்திகேயன்,

2 /8

தொகுப்பாளராக இருந்து நடிகராக வளர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன் தன்னை போல, டெலிவிஷனில் இருந்து சினிமாவிற்கு வருபவர்களையும் ஊக்குவித்து வருகிறார். 

3 /8

அமரன் படத்தில் நடித்திருக்கும் இவர், அடுத்து ஏ.ஆர் முருகதாஸின் படத்தில் நடிக்கிறார். இதன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. 

4 /8

கடந்த ஆண்டு வெளியான குட் நைட் படத்தை அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியிருந்தார். படம் சூப்பர் ஹிட் அடித்தது. 

5 /8

விநாயக் சந்திரசேகரனுக்கு தற்போது திருமணம் நடைப்பெற்றிருக்கிறது. இவர், பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். 

6 /8

விநாயக் சந்திரசேகரனுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. இதையடுத்து நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன்.

7 /8

சிவகார்த்திகேயன், விநாயக் சந்திரசேகரனுக்கு தங்க சங்கிலியை பரிசாக அளித்தார். 

8 /8

சிவகார்த்திகேயனை வைத்து, விநாயக் சந்திரசேகரன் புதிதாக ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.