தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா ஐடியா கொடுக்க ஆனந்த் மேனேஜரிடம் சொல்லி சதி செய்து கார்த்திக்கை தரையை துடைக்க விட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


கண்கலங்கி நிற்கும் அபிராமி


அதாவது, அபிராமி கம்பெனிக்கு வந்திருக்க கார்த்திக் வேலை செய்வதை பார்த்து கண்கலங்கி நிற்க அந்த நேரம் பார்த்து கார்த்தி மெஷினுக்கும் கையை விட்டு காயம் ஏற்பட அபிராமி பதறி போய் ஓடி வந்து துடிதுடிக்க கார்த்திக் நீங்க என்னங்க என்று கேட்க நீ வேலை செய்கிறது பார்க்க வந்தேன் என்று சொல்கிறார். 



உனக்கு இதெல்லாம் தேவையா வேண்டாம் வந்துடு என்று சொல்லி கார்த்திக்கை கூப்பிட கார்த்திக் இந்த குடும்பம் பிரியக்கூடாதுன்னு சொல்லிட்டுதானே நான் இந்த வேலைக்கு வந்தேன். வேலை செஞ்சா அடிப்பட தான் செய்யும் அதை பத்தி எல்லாம் நீங்க கவலைப்படாதீங்க வீட்டுக்கு போங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறான். 



கார்த்திக்கு சாப்பாடு எடுத்து வரும் தீபா


வீட்டுக்கு வந்த அபிராமி அருணாச்சலத்துடன் நடந்த விஷயத்தை சொல்லி வருத்தப்பட அடுத்ததாக தீபா கார்த்திக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு கம்பெனிக்கு வருகிறாள். சாதாரண புடவை கட்டிக்கொண்டு சிம்பிளாக வர செக்யூரிட்டி உள்ளே விட மறுப்பு தெரிவிக்கிறார். 


தீபா கார்த்தியோட மனைவி என்று சொல்ல கார்த்திக் சார் எங்களுடைய முதலாளி அவருடைய மனைவினு யாரை ஏமாற்ற பாக்கறீங்க? விட முடியாது என்று சொல்ல இந்த நேரம் பார்த்து அங்கு வரும் அருண் தீபாவை பார்த்து செக்யூரிட்டியை திட்டி விட்டு உள்ளே அழைத்துச் செல்கிறான். 


மேலும் படிக்க | Viral Video: தியேட்டரை கொளுத்திய அஜித் ரசிகர்கள்... தீனா வெளியீட்டில் அட்டகாசம்


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?


கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | ரஜினிக்கு கூலி படத்திற்கு வேட்டு வைத்த இளையராஜா.. ஷாக்கில் ரசிகர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ