பணத்தாசையால் சிக்கிய கோகிலா! பரபர திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்!
Karthigai Deepam Serial Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் அபிராமி குடும்பத்துடன் பொங்கல் கொண்டாட ஐஸ்வர்யா செய்த சதியால் தீபா கெட்ட பெயர் வாங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது ஆபீஸில் சிதம்பரம் பதவியா உங்களுக்கு தெரிந்தாலே மன கஷ்டம் தான் இருக்கும் என சொல்லிய விஷயங்களை நினைத்து இன்னும் பத்து நாளில் பதவியை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என முடிவெடுக்கிறான். ஏற்கனவே சிதம்பரத்துக்கு சவால் விட்ட விஷயங்களை நினைத்து பார்க்கிறான்.
பிறகு இளையராஜா வர அவனிடம் கார்த்திக் எனக்கு தெரிஞ்சு பல்லவி எனக்கு பரிச்சயமான ஒருத்தவங்களா தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன், அதனாலதான் சிதம்பரம் அப்படி சொல்லி இருக்கார் என்று சொல்கிறான்.
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது ஆசிரமத்தில் இருந்து சிஸ்டர்ஸ் சிலர் கார்த்திக் வருகின்றனர். பார்வையற்ற குழந்தைகளுக்கான ஆசிரமம் ஆசிரமம் நடத்தி வருவதாகவும், இந்த ஆசிரமம் தொடங்கி 25 வருடம் ஆகிவிட்டது அதை கொண்டாடுவதற்கு ஒரு சில ஏற்பாடுகள் செய்து வைத்திருப்பதாகவும் சொல்கின்றனர்.
கார்த்திக் டொனேஷன் ஏதாவது வேண்டுமா என்று கேட்க அவர்கள் பல்லவி பாடிய பாடல் குழந்தைகள் எல்லோருக்கும் ரொம்ப பிடித்து விட்டது அவர்களை வைத்து பாட வைத்தால் அவர்கள் இன்னும் சந்தோஷப்படுவார்கள் அதற்கான ஏற்பாடுகள் செய்யுமாறு கேட்க யோசிக்கும் கார்த்திக் பிறகு சம்மதம் தெரிவிக்கிறான். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது உணவுக்கான தலைமையில் தானே ஏற்றுக் கொள்வதாக சொல்லி அவர்களை அனுப்பி வைக்கிறான்.
பிறகு பதவியை கண்டுபிடிக்க என்ன செய்வது என யோசிக்க கார்த்திக் எனக்கு சவுண்ட் இன்ஜினியரை விசாரித்தால் உண்மை தெரியும் என்று நினைக்கிறேன் என்று சொல்லி அவரது வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர்.
சவுண்ட் இன்ஜினியர் வீடு பூட்டப்பட்டு இருக்க பக்கத்து விசாரிக்க யாரோ 4 ரவுடிகள் வந்து அவர்களை அடித்து விட்டு சென்றதாகவும் ஹாஸ்பிடலில் இருப்பதாகவும் சொல்ல இருவரும் கிளம்பி ஹாஸ்பிடல் வருகின்றனர். சவுண்ட் இன்ஜினியர் மனைவியை சந்தித்து நடந்தவற்றை கேட்டுவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே வருகின்றனர்.
பிறகு இளையராஜா ஒரு ஐடியாவை சொல்ல கார்த்தியும் அதற்கு சம்மதம் கூறுகிறான். அதைத்தொடர்ந்து ரூபஸ்ரீயின் பாட்டி கோகிலா நடந்து வரும்போது கீழே ஒரு நூறு ரூபாய் கிடைக்க அதை எடுத்து சந்தோஷப்படுகிறார் திரும்பவும் நடந்து வரும்போது கொஞ்சம் தூரத்தில் இன்னொரு 100 ரூபாய் நோட்டு கிடைக்கிறது.
அப்படியே நடந்து நடந்து வர ஒரு இடத்தில் 500 ரூபாய் நோட்டு கிடைக்க கோகிலா அதை எடுத்துக்கொண்டே சந்தோஷமாக திரும்பும் போது இளையராஜா அங்கு நிற்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? கார்த்தியின் திட்டம் தான் என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ