சீதா ராமன் அப்டேட்: சீதா ரூமுக்குள் சிக்கிய மகா.. மையால் நடக்க போவது என்ன?

Seetha Raman Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 29, 2023, 02:55 PM IST
  • சீதா ராமன் : இன்றைய எபிசோட்.
  • மையை மாற்ற முயற்சிக்கும் மகா.
  • மகாவுக்கு மூச்சுத்திணறல்.
சீதா ராமன் அப்டேட்: சீதா ரூமுக்குள் சிக்கிய மகா.. மையால் நடக்க போவது என்ன? title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மகா மந்திரவாதி கொடுத்த மையை செக்யூரிட்டிக்கு வைத்து டெஸ்ட் செய்ய அவன் பைத்தியம் பிடித்தது போல வீட்டை விட்டு ஓட தொடங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சந்தோஷப்படும் மகா

அதவாது, செக்யூரிட்டி பைத்தியம் பிடித்து வெளியே ஓடுவதை பார்த்த மகா சந்தோசப்படுகிறாள். செக்யூரிட்டி வெளியே ஓடி வருவதை பார்த்த சேது மற்றும் சுபாஷ் அவனை தடுத்து நிறுத்தி பேச முயற்சி செய்ய அவன் யார் நீங்க என்று கேட்டு விட்டு பைத்தியம் போல் ஓட அவர்கள் வீட்டிற்கு வந்து இந்த விஷயத்தை சொல்ல மகா மை வேலை செய்யுது என்று சந்தோசப்படுகிறாள். மேலும் இவர்கள் செக்யூரிட்டி பற்றி பேசியதை திசை திருப்பி விடுகிறாள்.

மேலும் படிக்க | Nandhi Varman Review: நந்திவர்மன் படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

மையை மாற்ற முயற்சிக்கும் மகா

அதன் பிறகு மறுநாள் காலையில் சீதாவும் அவளது அம்மா உமாவும் வெளியில் கோலம் போட்டு கொண்டிருக்க இது தான் சரியான நேரம் என்று சீதா ரூமுக்குள் சென்று அவளது கண் மையை எடுத்து விட்டு மந்திரவாதி கொடுத்த மையை மாற்றி வைக்க முயற்சி செய்கிறாள்.

இந்த நேரம் பார்த்து கல்பனாவும் அர்ச்சனாவும் ரூமுக்குள் வந்து விட மகா மறைந்து கொள்கிறாள். 

மகாவுக்கு மூச்சுத்திணறல்

இதனை தொடர்ந்து ஒவ்வொருத்தராக ரூமுக்குள் வர மகா வெளியே போக முடியாமல் தவிக்கிறாள்.

பதற்றத்தில் அவளுக்கு மூச்சு திணறலும் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவள் யாரும் இல்லாத நேரமாக பார்த்து வெளியே ஓடி வந்து ரூமுக்குள் சென்று மருந்து எடுத்து கொள்கிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | Parking OTT Release: ‘பார்க்கிங்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News