சுட்டுத் தள்ளப்பட்ட மகா.. ராம் எடுத்த சபதம், சிக்க போவது யார்? - சீதாராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் அர்ச்சனாவும் கல்பனாவும் சேர்ந்து மகாவை சுட்டுக் கொள்ள முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 22, 2024, 12:45 PM IST
  • சுட்டுத் தள்ளப்பட்ட மகா
  • ராம் எடுத்த சபதம்
  • சிக்க போவது யார்?
சுட்டுத் தள்ளப்பட்ட மகா.. ராம் எடுத்த சபதம், சிக்க போவது யார்? - சீதாராமன் இன்றைய எபிசோட் அப்டேட் title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியல் இன்று முதல் புதிய நேரத்தில் அதாவது மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் அர்ச்சனாவும் கல்பனாவும் சேர்ந்து மகாவை சுட்டுக் கொள்ள முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | புடவையில் ஜொலிக்கும் விக்ரம் பட புகழ் ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்! 

அதாவது மகா இரவு நேரத்தில் ஹாலில் அங்கம் இங்குமாக நடந்து கொண்டிருந்த நிலையில் இன்று சுபாஷ் ஏற்பாடு செய்த ஆள் ஒரு பக்கம் அர்ச்சனா ஒரு பக்கம் கல்பனா ஒரு பக்கம் என துப்பாக்கியுடன் மறைந்திருந்து மகாவை தாக்க ப்ளான் போட திடீரென மகா குண்டடிப்பட்டு கீழே சரிந்து விழுந்து உயிரை விடுகிறாள். 

இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது. அர்ச்சனா கல்பனாவிற்கு ஃபோன் போட்டு நீ சொன்னா மாதிரியே செஞ்சிட்ட என்று சொல்ல சுபாஷ் இங்கே தான் ஏற்பாடு செய்த ஆளை மகாவை சுட்டு தள்ளியதற்காக பாராட்ட யார் இந்த கொலையை செய்தது என குழப்பம் ஏற்படுகிறது. 

பயிற்சிக்கு சென்று இருந்த ராம் வீடு திரும்பி மகாவுக்கு இறுதி சடங்குகளை செய்கிறான். அதுமட்டுமல்லாமல் சித்திய கொண்டது யாராயிருந்தாலும் சும்மா விடமாட்டேன். கண்டிப்பாக தண்டனை வாங்கித் தருவேன் என சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Saravana Vickram: நடிப்பை விட்டு விலகும் சரவண விக்ரம்? இதுதான் காரணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News