தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் கையில் தீபாவின் தாலி கிடைக்க அவன் தீபாவை ஹாஸ்பிடலில் சேர்த்த பெண்மணி வீட்டிற்கு வந்து விசாரித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது அந்த பெண்மணி தீபாவை சென்னையில் உள்ள கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டதாக சொல்ல கார்த்திக் அங்கிருந்து கிளம்பி வருகிறான். 


மறுபக்கம் தீபா ஐசியூவில் இருக்க இதே ஹாஸ்பிடலுக்கு வந்த ஐஸ்வர்யாவின் உறவினர் ஒருவர் தீபா ஐசியூவில் இருப்பதை பார்த்து ஐஸ்வர்யாவுக்கு தகவல் கொடுக்க அவள் ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வருகிறாள்.


மேலும் படிக்க | IIFA Awards 2024: இந்திய சினிமாவின் மெகா கொண்டாட்டம்... தொகுப்பாளர்களாக இணையும் பவர்ஹவுஸ் ஜோடி


அதேபோல் கீதாவை தேடி அலையும் துங்கா இதே ஹாஸ்பிடலுக்கு வர தீபாவை பார்த்து கீதா நினைத்து இவங்க பேர் கீதா எனக்கு தெரிந்த பொண்ணு தான்.. எங்க கூட அனுப்பி வச்சிடுங்க என்று பாவமாக பேச நர்ஸ் அவர்களுடன் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்கிறாள். 


இதைத்தொடர்ந்து துங்கா தனது ஆட்களுக்கு கீதா கிடைச்சிட்டா அவளை நம்ப இடத்துக்கு கூட்டிட்டு போய் கொன்னுடலாம் என்று பேசிக் கொண்டிருக்க இதை நர்ஸ் கேட்டுவிட்டு தீபாவுக்கு பதிலாக வேறொரு பெண்ணை அவர்களுடன் ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்க முடிவு செய்கிறாள். 


துங்கா அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலில் இருந்து கிளம்ப கார்த்திக் ஹாஸ்பிடல் நோக்கி வர ஐஸ்வர்யாவும் இதே ஹாஸ்பிடலுக்கு வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க - திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் 10 பிரபலமான தமிழ் நடிகைகள் இவங்க தான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ