தேசிய கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி கீர்த்தி சாந்தனு துவக்கி வைத்தார்
சென்னையில் இந்த கோடை விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாடவும், வீட்டுக்குப் பெண்களுக்கு குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கும் வகையில், திருவான்மியூரில், தேசிய கைத்தறி & கைவினைப் பொருட்கள் கண்காட்சி இன்று துவங்கியது.
சென்னையில் இந்த கோடை விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாடவும், வீட்டுக்குப் பெண்களுக்கு குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கும் வகையில், திருவான்மியூரில், தேசிய கைத்தறி & கைவினைப் பொருட்கள் கண்காட்சி இன்று துவங்கியது.
சின்னத்திரை புகழ் கீர்த்தி சாந்தனு இந்த கண்காட்சியினை துவக்கி வைத்தார்.
இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், முழுமையாக கைகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், ஆடை, அணிகலன்கள், வீட்டுக்கு தேவையான அழகு சாதன பொருட்கள், பேக்ஸ், பர்னிச்சர்கள் என அனைத்து பொருட்களும் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தோடு அனைவரும் சுற்றிப்பார்ப்பதுடன் ஜாலியாக ஷாப்பிங்கும் செய்யும் வகையில் ஒரு அருமையான வாய்ப்பாக இந்த கண்காட்சி இருக்கும்.
மேலும் படிக்க | மினுமினு சேலையில் மயக்கும் அழகில் ஹன்சிகா.. வைரல் போட்டோஸ்
இந்த கண்காட்சியினை திறந்து வைத்த கீர்த்தி சாந்தனு பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது., இந்த அருமையான கண்காட்சியினை திறந்து வைத்ததில் மகிழ்கிறேன். வட இந்தியா சென்று தேடித்தேடி வாங்கும் பொருட்களை, இங்கு நீங்கள் எளிமையாக வாங்கலாம். சுற்றுலா செல்வது போல குடும்பத்துடன் வந்து கொண்டாடலாம். நான் இங்கு வந்தவுடன் ஷாப்பிங்கை ஆரம்பித்து விட்டேன் நீங்களும் உங்கள் ஷாப்பிங்கை ஆரம்பியுங்கள் என்றார்.
CERC வளாக கண்காட்சி மைதானத்தில், ஜூன் 7 முதல் 16 வரை, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது.
மேலும் படிக்க | 'தளபதி' விஜய்யின் 50வது பிறந்த நாள்.. ரீ ரிலீஸாகும் பிளாக்பஸ்டர் படம் 'போக்கிரி'
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ