Pokiri Movie To Be Re Released: 'தளபதி' விஜய்யின் 50ஆவது பிறந்த நாளை முன்னிட்டு போக்கிரி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Pokiri Movie To Be Re Released: 'தளபதி' விஜய்யின் 50ஆவது பிறந்த நாளை முன்னிட்டு போக்கிரி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கனகரத்னா மூவிஸ் சார்பில் எஸ்.சத்தியராமமூர்த்தி அவர்கள் தயாரிப்பில் நடிகர் மற்றும் இயக்குனர் பிரபுதேவா அவர்களின் இயக்கத்தில் 'தளபதி' விஜய், அசின், வடிவேலு, நாசர், பிரகாஷ்ராஜ், நெப்போலியன், ஆனந்தராஜ், ஸ்ரீமன், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பில் 2007-ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று வெளியாகிய போக்கிரி திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது நாம் அனைவரும் அறிந்ததே.
2005 ஆம் ஆண்டில் வெளியான இவரது முந்தைய திரைப்படமான திருப்பாச்சியின் வசூல் சாதனையை முறியடித்து, அவரது திரை வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது போக்கிரி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
போக்கிரி திரைப்படத்தில் காதல், ஆக்க்ஷன், நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை என அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்ததனால் படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அதுமட்டுமின்றி இந்த திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்திருந்தன.
இந்த திரைப்படம் அப்போதே 'ஷிப்டிங்' எனப்படும் மறுவெளியீட்டில் வெளியாகி 100-நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சமீபகாலமாக மறுவெளியீட்டில் வெளியாகும் திரைப்படங்கள் மாபெரும் வெற்றி அடைந்து வருகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணமாக 'தளபதி' விஜய் அவர்கள் நடித்த 'கில்லி' திரைப்படம் மறுவெளியீடாகி வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்ததோடு மட்டுமல்லாமல், 50 நாட்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த 'கில்லி' மறுவெளியீட்டின் மாபெரும் வெற்றியுடன் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக வரும் ஜூன் 22-ஆம் தேதி 'தளபதி'விஜயின் 50-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக 'போக்கிரி' திரைப்படம் உலகமெங்கும் வரும் ஜூன் 21-ஆம் தேதி மறுவெளியீடாக உள்ளது. இந்த திரைப்படத்தின் மறுவெளியீட்டிற்காக 'தளபதி' விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம்
இந்நிலையில் வரும் 22 ஆம் தேதி நடிகர் விஜய் தனது ஐம்பதாவது பிறந்தநாளைக் (Thalapathy Vijay 50th Birthday) கொண்டாட உள்ளார். விஜயின் தீவிர ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் விஜயின் பிறந்த நாளை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டம் தீட்டி வருகின்றனர்.
விஜய்யின் தி கோட் திரைப்படம்:
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் வெளியானதுமே ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சமீபத்தில் தி கோட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது. தி கோட் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தின் சி.ஜி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ