புதுடெல்லி: யஷ், சஞ்சய் தத் மற்றும் ரவீனா டாண்டன் நடித்த கேஜிஎஃப் 2 சமீபத்திய காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த pan-India திரைப்படத்தின் போஸ்டர்களால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் திளைக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது இந்த மெகா திரைப்படத்தின் டீஸர் வெளியீடு கைவிடப்படும் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கே.ஜி.எஃப் நாயகன் யஷ்-இன் (Yash), 35வது பிறந்தநாளான ஜனவரி 8 ஆம் தேதி வெளியாவதாக திட்டமிடப்பட்டிருந்தது. 


தற்போது டீசர் வெளியிடப்படாது என்ற செய்தி ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், படக் குழுவினர் அதைவிடப் பெரியதாக ஏதாவது செய்வார்கள் என்ற நம்பிக்கையும் ரசிகர்களுக்கு  இருக்கிறது.  


டிசம்பர் மாத மத்தியில் படபிடிப்பு முடிந்துவிடும். திரைப்படம் நன்றாக வந்திருப்பதாக, யஷ் உட்பட அனைவரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள்.  கேஜிஎஃப் 2 நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கிறது. கொரோனா வைரஸால் ஏற்படும் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது திரைப்படம் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது”  


Also Read | 'KGF: Chapter 2': ரவீனா டாண்டனின் அசர வைக்கும் First Look தோற்றம்


பிரசாந்த் நீல் (Prashanth Neel) இயக்கும் கேஜிஎஃப் 2 படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் (Hombale Films) நிறுவனத்தின் விஜய் கிரகந்தூர் (Vijay Kiragandur) தயாரிக்கிறார். இப்படத்தில் சஞ்சய் தத் முக்கிய வில்லனாக நடிக்கிறார். "சஞ்சய் தத் ஒரு அற்புதமான நடிகர், மற்றும் அவரது உடல் தோற்றம், உருவம், திறமை என கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமானவர் சஞ்சய் தத். கே.ஜி.எஃப் அத்தியாயம் 2 கதாபாத்திரத்திற்கு அவரைத் தவிர வேறு யாரும் பொருந்தமாட்டார்கள் என்று அனைவரும் சொல்லும் அளவுக்கு திரைப்படம் வந்திருக்கிறது." 


திரைப்படத்தின் இந்தி பதிப்பை ஃபர்ஹான் அக்தர் (Farhan Akhtar) மற்றும் ரித்தேஷ் சித்வானியின் (Ritesh Sidhwani)  எக்செல் என்டர்டெயின்மென்ட் (Excel Entertainment) நிறுவனம் வழங்குகிறது.   


“KGF 2 மிகவும் பிரம்மாண்டமான திரைப்படமாக இருக்கும். நீங்கள் KGF 1 திரைப்படத்தைப் பார்த்திருந்தால், இது எந்த வகையான திரைப்படம் என்பது பற்றி உங்களுக்கு புரிந்திருக்கும்.  ஆனால், கேஜிஎஃப் 2,  கேஜிஎஃப் 1 ஐ விட ஐந்து மடங்கு பிரம்மாண்டமாக இருக்கும்! ” என்று யஷ் தெரிவித்திருந்தார். இந்த கருத்து, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிகவும் அதிகரித்திருக்கிறது.


Also Read | KGF 2: டிசம்பர் மத்தியில் முடியும் இறுதிகட்ட படபிடிப்பில் Yash


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR