விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதற்கு நாள் யஷ் நடித்துள்ள கேஜிஎஃப்- 2 திரைப்படம் வெளியாகவுள்ளது. ஒரே சமயத்தில் இருபடங்களும் வெளியாகவுள்ளதால் இரு படங்களுக்குமே நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இரண்டு படங்களும் பான் - இந்தியா படமாக ரிலீஸ் ஆகவுள்ளதால் இந்திய அளவிலான கவனத்தையும் இவை ஈர்த்துள்ளன. அதே நேரம் ரசிகர்களிடையே இது தொடர்பான சலசலப்புகளுக்கும் பஞ்சம் இல்லை. பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப்பை எதிரெதிர் துருவங்களாக நிறுத்தி இணையத்தில் சண்டை போடவும் ஆரம்பித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனிடையே கேஜிஎஃப்-2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நேற்று பிரமாண்டமாக நடந்தது. அந்நிகழ்ச்சியில் பீஸ்ட் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த நடிகர் யஷ், பீஸ்ட் படமும் கேஜிஎஃப்- 2வும் போட்டி மனப்பான்மையில் எடுக்கப்பட்டவை அல்ல என்றார். ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் ஆதரவளிக்க இதுவொன்றும் தேர்தல் அல்ல எனக் குறிப்பிட்ட யஷ், இரு படங்களையுமே ரசிகர்கள் கண்டுகளிக்கலாம் என்றார். அதேபோல இது- ‘பீஸ்ட் vs கேஜிஎஃப்-2’ அல்ல என விளக்கம் அளித்த அவர், ‘பீஸ்ட் and கேஜிஎஃப்-2’ எனவும் சுட்டிக் காட்டினார்.


                                                                                              


மேலும் படிக்க | ‘பீஸ்ட்’ போஸ்டர்ல இந்த விஷயங்களைக் கவனிச்சீங்களா!?


பின்னர் விஜய் பற்றி பேசிய அவர், விஜய் தனக்கு மிகவும் சீனியர் நடிகர் எனவும் அவர்மீது தனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளதாகவும் தெரிவித்தார். விஜய்யின் பீஸ்ட்டை தியேட்டரில் பார்க்க மிகவும் ஆவலாக இருப்பதாகக் கூறிய அவர், விஜய்யின் ரசிகர்களும் கேஜிஎஃப்-2 படத்தை நிச்சயமாக விரும்புவார்கள் எனவும் தெரிவித்தார்.


யஷ்ஷின் பொறுப்பான இந்தப் பேச்சு பலரது பாராட்டையும் பெற்றுவருகிறது. சீனியர் நடிகரான விஜய்க்கு உரிய மரியாதை கொடுக்கும் விதமாக யஷ் நடந்துகொண்டதாகக் கூறி பலரும் அவரது பேச்சை இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க | ‘பீஸ்ட்’டை இவங்களாம் பாக்கக் கூடாதாம்! - ஏன் தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR