‘பீஸ்ட்’ போஸ்டர்ல இந்த விஷயங்களைக் கவனிச்சீங்களா!?

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வருகிற 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 27, 2022, 03:24 PM IST
  • விஜய்யின் பீஸ்ட் வருகிற 13 ஆம் தேதி ரிலீஸ்
  • பீஸ்ட்டிலிருந்து புதிய போஸ்டர் வெளியீடு
  • பீஸ்ட் டீசருக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
‘பீஸ்ட்’ போஸ்டர்ல இந்த விஷயங்களைக் கவனிச்சீங்களா!? title=

நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என ஐந்து மொழிகளில் பீஸ்ட் வெளியாகவுள்ளது.

ஒரே நேரத்தில் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப்படம் விஜய்யின் முதல் பான் - இந்தியா படமாக அமைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பீஸ்ட் குறித்து அவ்வப்போது அப்டேட்கள்  ரிலீஸ் ஆன வண்ணம் உள்ளன. இந்த நிலையில் இப்படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. unseen picture என்ற பெயரில் ரிலீசாகியுள்ள இந்தப் புகைப்படம் இணையத்தில் தற்போது ட்ரெண்ட் ஆகிவருகிறது. ஸ்டைலிசான தோற்றத்தில் கையில் துப்பாக்கியுடன் காட்சியளிக்கும் விஜய், போக்கிரி மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட படங்களின் காட்சிகளை நினைவுபடுத்துகிறார்.

 

மேலும் படிக்க | ‘ரஜினி-169’ படத்தின் டைட்டில் இதுவா?!

பீஸ்ட் படத்தைப் பொறுத்தவரை ஷாப்பிங் மால் ஒன்றை பயங்கரவாதிகள் ஆக்கிரமிப்பதாகவும் அதை எதிர்கொள்ளும் கதாநாயகன் விஜய் எவ்வாறு மக்களை காப்பாற்றுகிறார் என விவரிப்பதே படத்தின் ஒன்லைன் என சொல்லப்படுகிறது. ஒரே நாளில் நடக்கும் கதை எனச் சொல்லப்படுவதால் இதில் (பாடல்கள் தவிர) விஜய் படம் முழுக்கவே ஒரேவிதமான காஸ்ட்யூமில் மட்டுமே இருப்பார் எனக் கூறப்பட்டுவருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள விஜய்யின் போஸ்டர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒருவேளை படம் முழுக்க விஜய் அணியவுள்ளதாக சொல்லப்படும் காஸ்ட்யூம் இதுதானா எனும் கேள்வியும் எழுந்துள்ளது. 

இந்தப் போஸ்டர் ட்ரெண்ட் ஆகிவரும் நிலையில், பீஸ்ட் படத்தின் டீஸர் எப்போது வெளியாகும் எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

மேலும் படிக்க | முதல் போட்டியில் தோற்றால் சென்னை சாம்பியன் ஆகாதா?!- உண்மை என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News