2008 –ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான வெயில் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தார் ஜி.வி. பிரகாஷ். அதன் பின் இருவரும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் அந்த கூட்டணி #AV33 படத்திற்காக இணைந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் முதன் முதலில் நடிக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மாமன் - மச்சான் முதன் முதலில் இணையும் படம் என்பதாலும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. டிரம்ஸ்டிக் புரொடக்ஸன் தயாரிக்கும் இப்படத்தில் பிரகாஷராஜ், ராதிகா, யோகி பாபு, அம்மு அபிராமி, கேஜிஎப் புகழ் ராமசந்திர ராஜீ, இமான் அண்ணாச்சி என நடிகர் பட்டாளமே நடக்கின்றனர். அனல் அரசு இப்படத்திற்கு ஸ்டன்ட் கோரியோகிராப் செய்கிறார்.


ALSO READ | வரி பாக்கியை செலுத்த நடிகர் தனுஷ்-க்கு 48 மணி நேர அவகாசம்: நீதிபதி கெடு


பழனியில் ஆராம்பித்த இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் பாதியில நின்றது. தற்போது தூத்துக்குடியில் இப்படத்தின் சூட்டிங் தொடங்கி மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஊரடங்கு தளர்வுகள் முடிந்து திரையரங்கு திறக்கப்பட்வுடன் வெளியிடலாம் என்று அப்படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது அருண் விஜய் நடிப்பில் ரிலீஸ் ஆவதற்கு தயாராக சினம் மற்றும் பார்டர் படங்கள் உள்ளன. அருண் விஜய் - ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் பாக்சர் என்ற படம் அறிவிப்பு வெளியாகி கிடப்பில் உள்ளது. 


ALSO READ | படப்பிடிப்பில் காயமடைந்த சேரன் - தலையில் 8 தையல்கள் - மருத்துவமனையில் அனுமதி


சரோ சண்முகம் இயக்கத்தில் அருண் விஜயின் மகன் நடிக்கும் ஓ மை டாக் என்ற திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் அமேசான் பிரைமில் வெளிவர இருக்கிறது. இப்படத்தில் அருண் விஜய், அவரது தந்தை விஜயக்குமார் என மூன்று தலைமுறையும் நடித்துள்ளனர்.


Also Read | Covid Updates Tamil Nadu: ஆகஸ்ட் 6 தமிழகத்தில் இன்று 1,985 பேருக்கு கொரோனா பாதிப்பு; 30 பேர் பலி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR