சென்னை: ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரி பாக்கியை செலுத்த நடிகர் தனுஷுக்கு 48 மணி நேர அவகாசத்தை நீதிமன்றம் அளித்துள்ளது.சொகுசு கார் இறக்குமதி செய்ததில் வரிவிலக்கு கோரி இருந்த நடிகர் தனுஷின் மனு மீதான விசாரணையை நீதிபதி முடித்து வைத்தார்.
சொகுசு காருக்கு மீதமுள்ள 50% வரியை கட்ட நடிகர் தனுஷுக்கு (Dhanush) 48 மணி நேர கெடு அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.சொகுசு காருக்கு நடிகர் தனுஷ் செலுத்த வேண்டிய ₹. 30,30,757 வரி பாக்கியை அடுத்த 48 மணி நேரத்திற்குள் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த விசாரணையின் போது சில முக்கிய அம்சங்களையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
சோப்பு வாங்கும் கூலித் தொழிலாளர்கள் விலக்கு கேட்கிறார்களா?
சாமானியர்களை எடுத்துக்காட்டாக காட்டிய நீதிபதி பிரபலங்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும் என்றார். சோப்பு வாங்கும் கூலித் தொழிலாளர்களும், பெட்ரோல் போடும் சாதாரண மக்களும் வரி விலக்கு கேட்கிறார்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நேரத்தை வீணாக்கும் வீண் வழக்குகள்:
நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்துள்ள நிலையில், இது போன்ற வழக்குகள் மேலும் சுமைதான் என நீதிபதி சுட்டிக்காட்டினார்.
ALSO READ: காருக்கு வரிவிலக்கு வழக்கு: நடிகர் தனுஷுக்கு நீதிபதி கண்டனம்
வெளிநாட்டு கார் வானிலா பறக்கும்?
வெளிநாட்டு கார் என்பதால், இந்த கார்கள் வானிலா பறக்கும் என கேட்ட நீதிபதி, மக்கள் வரிப்பணத்தில் போட்ட சாலைகளில் தான் பிரபலங்களும் காரை ஓட்டுகிறார்கள் எனக் கடுமையாக சாடினார்.
என்ன வேலை செய்கிறீர்கள்?
தனுஷ் குறிப்பிட்ட காலத்தில் மீதமுள்ள நுழைவு வரி ஏன் கட்டாமல் இருந்தார் என கேள்வி எழுப்பிய நீதிபதி, தனது வேலை குறித்து தனுஷ் ஏன் குறிப்பிடவில்லை என்றும் கேட்டார்.
முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி ரூபாய் 60.66 லட்சம் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து, விலக்கு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் 50% வரி செலுத்தினால் காரைப் பதிவு செய்ய ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் ரூபாய் 30.33 லட்சம் வரி செலுத்தியதாக நடிகர் தனுஷ் கூறியதால் விதிகளைப் பின்பற்றிப் பதிவு செய்ய 2016 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்பின் இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகாததால், விசாரணையை இன்றைய தேதிக்கு தள்ளி வைத்தார்.
ALSO READ | Staple Art: கர்ணன் - சீவக வழுதியின் கலைப்படைப்பு உருவாக்கும் புதிய சாதனை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR