புத்தகத் திருவிழா இப்போது நடைபெற்றாலும் சரி, பொன்னியின் செல்வன் நாவலுக்கு மட்டும் எப்போதும் கிராக்கியுண்டு என்பார்கள். அந்தளவுக்கு படுசுவாரஸ்யமான தமிழ் நாவல் என்று பொன்னியின் செல்வன் பலதரப்பட்ட வாசகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட இந்த நாவலை சினிமாத்துறை விட்டுவிடுமா என்ன ? எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே இந்த நாவலின் மீதான சர்ச்சை தொடங்கிவிட்டது. இயக்குநர் மகேந்திரனிடம் பொன்னியின் செல்வன் நாவலை திரைக்கதையாக்கித் தருமாறு எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன்: வந்தான் வந்தியத்தேவன், கார்த்தி கதாபாத்திரத்தின் போஸ்டர் ரிலீஸ்


திரைக்கதையை கச்சிதமாக இயக்குநர் மகேந்திரன் தயாரிக்க, அது பிற காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. தமிழ்ச் சினிமா வரலாற்றில் இதுபோன்று பல இயக்குநர்கள், நடிகர்கள் இந்த நாவலை எப்படியாவது சினிமாவாக எடுத்துவிட வேண்டும் என்று விருப்பத்துடன் இருந்தனர். பட்ஜெட், நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளால் பலருக்கு இந்த வாய்ப்பு எட்டவேயில்லை. 



கடைசியாக, எழுத்தாளர் கல்கி எழுதிய இந்த பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் நாவல், இயக்குநர் மணிரத்னமிடம் வந்து சேர்ந்திருக்கிறது. மணிரத்னம் படம் என்றாலே எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் நிலையில், அவர் பொன்னியின் செல்வன் நாவலை இயக்கப்போகிறார் என்று தெரிந்துமே ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரமும், தமிழ்த் திரை ரசிகர்களும் ஆர்வத்தின் உச்சிக்குச் சென்றனர். 



வரலாற்றுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் செப்டெம்பர் மாதம் 30ம் தேதி ரிலீஸாகிறது. அதுவும் இரண்டு பாகமாக!. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உலகெங்கும் வெளியாக உள்ளது.  



இதனிடையே, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு வந்த தயாரிப்பு நிறுவனம், இன்று மாலை 6 மணிக்கு டீஸரை வெளியிடுகிறது. 
இத்தனை எதிர்பார்ப்புகளையும் வழக்கம்போல் சத்தமில்லாமல் கடந்த இயக்குநர் மணிரத்னம், தற்போது டீஸர் வெளியீடு வரை வந்திருக்கிறார். படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் தயாரிப்பு நிறுவனம் ஒருபுறம் செய்துகொண்டிருக்க, அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் தங்களின் தரப்புக்கு ட்விட்டரில் ஜாலியாக ப்ரமோஷன் செய்து வருகின்றனர். 


மேலும் படிக்க | சோழர்கள் சிவ பக்தர்களா? திருமால் பக்தர்களா?! சர்ச்சையில் சிக்கிய பொன்னியின் செல்வன்


அதாவது,  படத்தை ப்ரமோட் செய்து த்ரிஷா தனது ட்விட்டரில் பதிவிட்ட போஸ்டை டேக் செய்த கார்த்திக், ‘இளவரசி...உங்க லைவ் லோகேஷ் அனுப்புங்க. உங்க அண்ணனின் ஓலையை கொடுக்கணும்’ என்றவாறு ஜாலியாக கமெண்ட் போட்டிருந்தார்.



அதாவது, படத்தில் த்ரிஷா குந்தவையாகவும், கார்த்திக் வந்தியத்தேவனாகவும் நடிக்கின்றனர். அந்த கதாபாத்திரத்தின் வெளிப்பாடாகவே இதனை கார்த்திக் பதிவிட்டிருந்தார்.


பின்னர் கார்த்திக் போட்டிருந்த கமெண்டைப் பார்த்த த்ரிஷா, கார்த்திக் போஸ்டை டேக் செய்து, ‘Sorry...அரண்மனையில் smart phones and smart people not allowed." என பதிவிட்டுள்ளார்.



படத்தின் கேரக்டராகவே மாறி இருவரும் மாறிமாறி போட்ட இந்த ட்விட்டர் போஸ்டுகள் படத்தின் ப்ரமோஷனுக்கு பெருமளவு உதவி வருகின்றன. 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR