பொன்னியின் செல்வன்: வந்தான் வந்தியத்தேவன், கார்த்தி கதாபாத்திரத்தின் போஸ்டர் ரிலீஸ்

Ponniyin Selvan: ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி. அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த வந்தியத்தேவன் (கார்த்தி) வந்துவிட்டார். கார்த்தி கதாபாத்திரத்தின் போஸ்டர் ரிலீஸ் ஆனது!!

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 5, 2022, 02:11 PM IST
  • வெளியானது பொன்னியின் செல்வம் படத்தில் கார்த்தி கதாபாத்திரத்தின் போஸ்டர்.
  • குதிரையில் மாஸாக வந்திறங்கினார் வந்தியத்தேவன்.
  • படத்தின் ரிலீசுக்கான காத்திருக்கிறது ரசிகர் பட்டாளம்.
பொன்னியின் செல்வன்: வந்தான் வந்தியத்தேவன், கார்த்தி கதாபாத்திரத்தின் போஸ்டர் ரிலீஸ் title=

பழம்பெரும் இயக்குனர் மணிரத்னத்தின் கனவுத் திட்டமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தயாரிப்பில் உள்ளது. வரலாற்று திரைப்படமாக எடுக்கப்படும் இது இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது.

முதல் பாகம் இந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளிவருகிறது. படத்தின் தயாரிப்பாளர்கள் 'பொன்னியின் செல்வன்' படத்தின் விரிவான விளம்பரத்தைத் தொடங்கியுள்ளனர். இப்போது படத்தில் கார்த்தியின் கதாபாத்திரம் தயாரிப்பாளர்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

சோழர்களின் பட்டத்து இளவரசன் மற்றும் அக்கினிப் போர்வீரன் ஆதித்ய கரிகாலனின் (சீயான் விக்ரம்) கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்திய பிறகு, கார்த்தியின் கதாபாத்திரம் மற்றும் தோற்றம் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அவர் உளவாளியாகவும், வந்தியத்தேவன் என்ற துணிச்சலான சாகசக்காரனாகவும் நடித்துள்ளார்.

மேலும் படிக்க | சோழர்கள் சிவ பக்தர்களா? திருமால் பக்தர்களா?! சர்ச்சையில் சிக்கிய பொன்னியின் செல்வன்

'பொன்னியின் செல்வன்' டீசர் இந்த வார இறுதியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது நிச்சயம் பிரமாண்டமாக இருக்கும் என்ற ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்த படம் தமிழ் இலக்கிய உலகின் மிக பிரபலமான புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. 

இந்த படத்தின் காலம் சோழ வம்சத்தின் காலகட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, விக்ரம் பிரபு மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் இதில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் பல பிரபலமான நடிகர்களும் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தின் இசையில் சில பழங்கால கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | சோழா டீ To சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஆதித்த கரிகாலன் - வைரலாகும் விக்ரம் புகைப்படம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News