‘குஷி’ திரைப்படம் ஓடிடியில் வெளியீடு..! எந்த தளத்தில் எப்போது ரிலீஸ்..? முழு விவரம்..!
Kushi OTT Release Date: சமந்தா நடிப்பில் உருவான குஷி திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..?
தென்னிந்திய திரையுலகின் முன்னனி நடிகர்களாக வலம் வருபவர்கள், சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா. முன்னர் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா சில படங்களுக்கு முன்னர் வரை ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அவரை தொடர்ந்து, நடிகை சமந்தா தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். இவர்களுக்கு, கடைசியாக வெளியான படங்கள் தோல்வியை கொடுக்க, ஒன்றாக இணைந்து நடித்த ‘குஷி’ திரைப்படம் கம்-பேக் ஆக அமைந்தது.
குஷி திரைப்படம்:
தெலுங்கு மொழியில் உருவான குஷி திரைப்படம், காதல்-காமெடி ட்ராமாவாக உருவாகியிருந்தது. இதில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். சரண்யா பொன்வண்னன், முரளி ஷர்மா, சச்சின் கேதகார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தை ஷிவ நிர்வாணா இயக்கியிருந்தார். இவர், இதற்கு முன்னரே சமந்தாவுடன் சில படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளார். படம், செப்டம்பர் 1ஆம் தேதி வெளியானது. சினிமா விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பெரும்பாலான ரசிகர்கள் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பினை அளித்திருந்தனர்.
ஓடிடி வெளியீடு..?
குஷி படம் வெளியாகி 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. தென்னிந்திய மொழியில் பல படங்களும் வெளிவர ஆரம்பித்து விட்டன. இந்த நிலையில், இப்படம், ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. படம், வரும் அக்டோபர் மாதம் 6ஆம் ஹேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகார்ப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | நடிகையுடன் மேடையிலேயே எல்லைமீறி ரொமான்ஸ் செய்த விஜய் தேவரகொண்டா..!
ஜவான் படத்தால் அடிவாங்கிய வசூல்..?
குஷி படத்திற்கு ஏற்கனவே கலவையான விமர்சனங்கள் வந்தது. தெலுங்கு மொழியில் உருவான இந்த படத்தை தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டனர். ரிலீஸான 3 நாட்களிலேயே படம் 70 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது. குஷி படம் வெளியான சில நாட்களிலேயே (செப்டம்பர் 7) ஜவான் திரைப்படம் வெளியானது. இப்படம், பாலிவுட், கோலிவுட் என பல திரையுலக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமாகும். ஆதாலால், இப்படத்தின் ரிலீஸால் குஷி படத்தின் வசூல் அடிவாங்கியதாக கூறப்படுகிறது.
அதிக சம்பளம் வாங்கியது யார்..?
குஷி திரைப்படத்தில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவை தவிர பெரிய நட்சத்திரங்கள் யாரும் நடிக்கவில்லை. இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்களிலேய இவர்கள் இருவர் மட்டுமே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியுள்ளனர். தனது பிற படங்களில் 6 முதல் 7 கோடி வரை சம்பளம் வாங்கும் விஜய் தேவரகொண்டா, குஷி படத்திற்காக 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழி படங்களிலும் கலக்கி வரும் சமந்தா ஒரு படத்தில் நடிக்க 7 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஆனால், குஷி படத்திற்காக அவர் 4 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கதை என்ன..?
விப்லவ் என்ற கதாப்பாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். இவருக்கு காஷ்மீரில் அரசு வேலை கிடைக்க, அங்கு ஆராத்யாவை (சமந்தா) சந்திக்கிறார். இருவரும் காதலித்து பெற்றோரின் மறுப்பை மீறி திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் சண்டை சச்சரவுகள் வருகிறது. இதை மீறி, இருவரும் தங்கள் காதலில் வென்றார்களா என்பதுதான் கதை.
மேலும் படிக்க | குஷி படத்தில் அதிக சம்பளம் வாங்கியது யார்? விஜய் தேவரகொண்டாவா? சமந்தாவா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ