பி.வாசு இயக்கத்தில் மீண்டும் உருவாகும் படம் சந்திரமுகி 2. ராகவா லாரன்ஸ் லீட் ரோலில் நடிக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அண்மையில் சந்திரமுகி 2 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. சந்திரமுகி முதல் பாகத்தில் நடித்த வடிவேலு, இரண்டாம் பாகத்திலும் காமெடியில் கலக்க இருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | புஷ்பா-2 படத்தில் ராஷ்மிகா இல்லையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!


படத்திற்கான இசையை பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீராவானி இசையமைக்கிறார். படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள் அனைத்தும் தேர்வு செய்யபட்டுவிட்ட நிலையில், முதல் பாகத்தில் மிரட்டியிருந்த ஜோதிகா கதாப்பாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள்? என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை. சந்திரமுகி முதல் பாகத்தில் பிரபுவுக்கு மனைவியாக ஜோதிகா நடித்து, சந்திரமுகியாகவும் கலக்கியிருந்தார். அவரின் நடிப்புக்கு பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்த நிலையில், அவருக்கு இணையான ஒருத்தரை சந்திரமுகி 2-வில் நடிக்க வைக்க ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குநர் பி.வாசு முடிவெடுத்துள்ளனர்.



முதலில் ராசிக்கண்ணா அல்லது ஆண்டிரியா ஆகியோரில் யாரேனும் ஒருவர் நடிக்கலாம் எனக் கூறப்பட்டது. பின்னர் திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் பரவின. பொன்னியின் செல்வன் படத்தை நடித்து முடித்திருக்கும் திரிஷா, பவுர்புல்லான கதாப்பாத்திரமான சந்திரமுகியாக நடிக்கலாம் எனவும் கூறப்பட்டது. ஆனால், இப்போது அவருக்கு பதிலாக சசிக்குமார் நாயகி லட்சுமி மேனன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லட்சுமி மேனனும் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.   


மேலும் படிக்க | இரவின் நிழல் படம் வெளியாகுமா? வந்தது புதிய சிக்கல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR