ப்ளூ ஸ்டார் முதல் ஈகில் வரை-இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களில் லிஸ்ட்!
Blue Star To Eagle OTT Releases This Week: இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்களின் லிஸ்டை இங்கு பார்க்கலாம்.
Blue Star To Eagle OTT Releases This Week: திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் அனைத்தும் வந்த சில நாட்களிலேயே ஓடிடி தளங்களில் வெளியாவது வழக்கமாகி விட்டது. தியேட்டர்களில் படங்களை பார்க்க தவறியவர்கள், அவற்றை ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீம் செய்து குடும்பத்துடன் அமர்ந்து காண்கின்றனர். வாரா வாரம், புதுப்புது படங்களும், தொடர்களும் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படைப்புகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
ப்ளூ ஸ்டார்:
அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி வெளியான படம், ப்ளூ ஸ்டார். இந்த படத்தை பா.இரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமாக நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்து வழங்கியுள்ளது. இப்படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து சாந்தனு பாக்கியராஜ் நடித்திருக்கிறார். இவர்கள் மட்டுமன்றி கீர்த்தி பாண்டியன், அருண் பாலாஜி, பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை எஸ்.ஜெயகுமார் இயக்கியுள்ளார். இந்த படம், வரும் மார்ச் 1ஆம் தேதி (நாளை) அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது.
ஈகிள்:
தெலுங்கு நடிகர் ரவிதேஜா நடிப்பில் இம்மாதம் (பிப்ரவரி 9) வெளியான படம், ஈகிள். இந்த படத்தில் காவியா தப்பர், அனுபமா பரமேஸ்வரன், மதுமிதா, வினய், நவ்தீப் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த படம், அமேசான் ப்ரைம் தளத்தில் தற்போது வெளியாக இருக்கிறது.
மேலும் படிக்க | Deepika Padukone: கர்ப்பத்தை அறிவித்த தீபிகா -ரன்வீர்.. குஷியில் ரசிகர்கள்
கேம் ஆன்:
தெலுங்கு மொழியில் உருவாகி கடந்த 2ஆம் தேதி வெளிவந்த படம், கேம் ஆன். இந்த படத்தில் கீதானந்த், நேஹா, மதுமிதா, சுபலேகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தை நாளை முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் காணலாம்.
சன் ஃப்ளவர்:
இந்தி மொழியில் உருவாகிய்யுள்ள காமெடிசீரீஸ், சன் ஃப்ளவர். இந்த தொடரின் இரண்டாவது சீசன் ஜீ 5 தளத்தில் வெளியாக உள்ளது. இதனை, நாளை முதல் ஜீ 5 தளத்தில் காணலாம். இத்தொடரில், சுனில் க்ரூவர், ராதா பட்ம், சலோனி கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கோட் 8 பார்ட் 2:
கனடா மொழியில் உருவாக்கப்பட்டுள்ள தொடர், கோட் 8 பார்ட் 2. இந்த தொடரில் ராபி அமெல், ஸ்டீஃபன் அமெல், சிரெனா குல்மாகஸ், நாடலி லிகோண்டி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடரை நாளை முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.
ஸ்பேஸ்மேன்:
சயின்ஸ் ஃபிக்ஷன் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள படம், ஸ்பேஸ்மேன். இந்த படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது. இதனை நாளை முதல் பார்க்கலாம்.
பூகட் பல்ராஜு:
தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டுள்ள படம், பூகட் பல்ராஜு. இதில் பிபாஸ் பிரபலம் சயத் சோயல் ஹீரோவாக நட்த்திருக்கிறார். இந்த படம், தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
மை நேம் இஸ் ஸ்ருதி:
ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள படம், மை நேம் இஸ் ஸ்ருதி. இந்த தொடர் மாஃபியா/த்ரில்லர் கதையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதனை ஸ்ரீநிவாஸ் ஓம்கார் இயக்கியிருக்கிறார். இந்த படத்தையும் ஆஹா ஓடிடி தளத்தில் நாளை முதல் காணலாம்.
எனக்கு எண்டே கிடையாது:
தமிழில் மிஸ்டரி த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள படம், எனக்கு எண்டே கிடையாது. இந்த படத்தில் கார்திக் வெங்கட் ராமன் நாயகனாக நடித்துள்ளார். ஸ்வயம் சித்தா என்ற நடிகை முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருக்கிறார். இப்படம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானதை தொடர்ந்து தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
பிற ஓடிடி ரிலீஸ்கள்:
மேற்குறிப்பிட்டவை மட்டுமன்றி, இன்னும் சில படங்களும் தொடர்களும் கூட மார்ச் 1ஆம் தேதி ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
>அமெரிக்கன் ஃபிக்ஷன்-ஆங்கிலம்-அமேசான் ப்ரைம்
>அம்பாஜி பேட்ட மேரேஜ் பேண்ட்-தெலுங்கு-ஆஹா தளம்
>மாமா லா லீகல் ஹாய்-இந்தி-நெட்ஃப்ளிக்ஸ் தொடர்
>மை நேம் இஸ் லோகிவான்-கொரியன்-நெட்ஃப்ளிக்ஸ்
>அமெரிக்கன் கான்ஸ்பிரஸி-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ் தொடர்
>ஃபைவ் நைட்ஸ் அட் ஃப்ரெட்டிஸ்-ஆங்கிலம்-ஜியோ சினிமா
>தி இம்பாசிபிள் ஹேர்-கொரியன்-ஹாட்ஸ்டார் தொடர்
>தி மைர் மில்லனியம்-போலிஷ்-நெட்ஃப்ளிக்ஸ் தொடர்
மேலும் படிக்க | ராஷ்மிகாவிற்கும் விஜய் தேவரகொண்டாவிற்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ