Latest News Actor Joins Good Bad Ugly Ajith Movie : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் அஜித், தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு படங்களில் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில், குட் பேட் அக்லி படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குட் பேட் அக்லி:


அஜித் குமாரின் தீவிர ரசிகரும் இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம்தான், குட் பேட் அக்லி. இந்த படத்தில், நடிகர் அஜித் ஹீரோவாக வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார். கைகளில் டேட்டூ, கூலிங் கிலாஸ், பூ போட்ட சட்டை என பல வருடங்களுக்கு பிறகு பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்தார் அஜித். அது மட்டுமன்றி, ஹைதராபாத்தில் ஆரம்பித்த இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுவென நடைப்பெற்று, வேகமாக முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித், கேங்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. விரைவில் ஷூட்டிங் முடிக்கப்படும் என்றும், அடுத்தக்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


புதிதாக இணைந்த நடிகர்..


குட் பேட் அக்லி திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத சில நடிகர்கள் இணைந்திருக்கின்றனர். அப்படி, சமீபத்தில் இணைந்த ஒரு நடிகர்தான், அர்ஜூன் தாஸ். கைதி திரைப்படத்தில் “லைஃப் டைம் செட்டில்மெண்ட்” டைலாக்கை பேசி பிரபலமான இவர், அடுத்து விஜய்யுடன் மாஸ்டர், கமலுடன் கேமியோ ரோலில் விக்ரம் என சில படங்களில் வில்லனாக நடித்தார். தற்போது கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். 


32 வயதாகும் அர்ஜுன் தாஸிடம் பெண்களுக்கு பிடித்த விஷயமே அவரது அடித்தொண்டை குரலும், முரட்டுத்தனமான தோற்றமும்தான். இவர், விஜய்யுடன் நடித்ததை தொடர்ந்து, அஜித்துடன் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடிப்பதாக முன்னர் கூறப்பட்டது. இது குறித்து அவரே இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். 


அர்ஜுன் தாஸின் பதிவு!!


நடிகர் அர்ஜுன் தாஸ், தனது சமூக வலைதள பக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்தது குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 



தான் முதன்முதலில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்த போது நடிகர் அஜித்தின் அலுவலகத்தில்தான் வேலை பார்த்ததாகவும், ‘வீரம்’ திரைப்படத்தின் டீசரை கூட நான்தான் ஆன்லைனில் பதிவேற்றியதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தற்போது இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதும் அஜித்தால்தான் என கூறியிருக்கும் அவர் அவருக்கு மனமார்ந்த நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்திருக்கிரார். தனக்கு வாய்ப்பளித்த ஆதிக், சுரேஷ் சந்திரா உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார், அர்ஜுன் தாஸ். 



மேலும் படிக்க | ரஜினியின் கூலி படத்தில் நடிக்கிறாரா அர்ஜுன் தாஸ்? அவரே சொன்ன பதில்!


மாஸ்டர் படம் குறித்து பேசிய அஜித்..


அஜித்தையும் விஜய்யையும் என்னதான் பிறர் போட்டி நடிகர்களாக பார்த்தாலும், உண்மையில் இவர்கள் இருவருமே நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். அதை எடுத்துக்காட்டும் விதத்தில் இருக்கிறது அர்ஜுன் தாஸ், தனது பதிவில் குறிப்பிட்டிருக்கும் ஒரு விஷயம். அவர் தனது பதிவில், “மாஸ்டர் படத்தை பார்த்த பின்பு ‘அர்ஜுன், நாம ரெண்டு பேரும் கண்டிப்பா ஒரு படம் பண்றோம்’” என அஜித் தன்னிடம் கூறியதாக அர்ஜுன் தாஸ்  தன் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். 


பிற நடிகர்கள்…


குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக கூறப்படுகிறது. அவர்களுடன், நடிகர் பிரசன்னாவும் இணைந்திருக்கிறார். இப்போது புதிதாக அர்ஜுன் தாஸ் நடிக்க இருக்கிறார். அஜித்தின் ரசிகர்கள் இப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.


மேலும் படிக்க | காதலியுடன் அர்ஜுன் தாஸ்! இது ‘அந்த’ நடிகையா? வைரலாகும் போட்டோ..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ