Latest News Arjun Das Instagram Story With His GirlFriend : தமிழ் திரைப்பட நடிகரான அர்ஜுன் தாஸ், ஒரு பெண்ணின் தோள் மீது கைப்போட்டபடி இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

Latest News Arjun Das Instagram Story With His GirlFriend : சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்களுக்கு ஹீரோவாக நடிக்கும் நடிகர்கள் மீது தான் க்ரஷ் இருந்தது. ஆனால் அர்ஜுன் தாஸ் அந்த ட்ரெண்டையே மாற்றினார். கைதி படத்தில் வில்லனாக பிரபலமான இவரை பல பெண்களுக்கு பிடித்திருந்தது. இவரது தொண்டையிலிருந்து பேசும் ஆழமான குரலும், கட்டுமஸ்தான உடலும், பார்த்தவுடன் வசீகரிக்கும் தோற்றமும் ரசிகைகள் பலரை நிலை கொலைய செய்தது. குறிப்பாக இவரது குரலை வைத்து பலர் இவரை முன்னாள் வில்லன் நடிகர் ரகுவரனின் மகனா என்றெல்லாம் கேட்டனர்.
கைதி படத்தில் இவர் பேசிய “லைஃப் டைம் செட்டில்மெண்ட்” டயலாக் பின்னர் மீம் மெட்டிரியலாகவும் மாறியது. இதைத் தொடர்ந்து அட்லி தயாரித்த அந்தகாரம் படத்தில் ஹீரோவாக நடித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
ரசிகர்களின்மனதை உடைத்த இன்ஸ்டா ஸ்டோரி:
நடிகர் அர்ஜுன் தாஸ் நேற்று தனது இன்ஸ்டால் பக்கத்தில் ஒரு போட்டோவை ஸ்டோரியில் பதிவித்து இருந்தார். ஒரு பெண்ணின் தோள்பட்டை மீது கை போட்டுவாரு மலைமீது அவர் நின்று கொண்டிருந்த போட்டோ அது. இந்த போட்டோவுடன் சேர்த்து ஒரு ஹார்ட்டின் ஈமேஜியையும் அர்ஜுன் தாஸ் இணைத்திருந்தார். இதில் அந்தப் பெண் யார் என்பதை தெரியவில்லை. இது அவரை கிரஷாக வைத்திருந்த ரசிகர்களின் மனதினை சுக்கு நூறாக நொறுக்கி இருக்கிறது. திடீரென அர்ஜுன் தாஸ் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை ஹார்ட் போட்டு வெளியிட்டவுடன் பலரும் திகைத்து தான் போயிருக்கின்றனர்.
அந்த நடிகையா?
அர்ஜுன் தாஸ் சில மாதங்களுக்கு முன்பு மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் காதலா என்று கேட்க ஆரம்பித்தனர். இதற்கு இருவருமே சிரித்துக் கொண்டு மறுப்பு தெரிவித்தனர். தற்போது, அர்ஜுன் தாஸ் உடன் இருக்கும் அந்த பெண், ஒருவேளை ஐஸ்வர்யா லக்ஷ்மியாக இருப்பாரோ என்று ரசிகைகள் சந்தேகம் கொண்டுள்ளனர்.
பட ப்ரொமோஷனா?
ஒரு சில நடிகர்கள், தங்களின் படங்களை ப்ரொமோட் செய்வதற்காக இது போன்ற புகைப்படங்களையும் அல்லது அறிவிப்புகளையும் வெளியிடுவர். ஹரிஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்த ‘ஓ மணப்பெண்ணே’ படத்தின் அறிவிப்பிற்கு முன்பு அவர்களும் இது போன்ற ஒரு பதிவை வெளியிட்டனர். எனவே, இதுவும் அது போன்ற ஒரு பிரமோஷன் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எதுவும், அர்ஜுன் தாஸ் பேசிய பிறகுதான் தெரிய வரும்.
ஹீரோவாக நடித்த படங்கள்:
மலையாளத்தில் கப்பேலா என்ற பெயரில் வெளியான படத்தின் தெலுங்கு ரீமேக், புட்ட பொம்மா இந்த படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரமாக வந்தார். இதை அடுத்து, தமிழில் அநீதி என்ற படத்தில் இந்த ஆண்டு போர் மற்றும் ரசவாதி படங்களிலும் நடித்தார். இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் ஓரளவுக்கு நல்ல விமர்சனங்களை பெற்று வசூலையும் பெற்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ