Aarti Ravi : “எனது அனுமதியின்றி விவாகரத்து அறிவிப்பு வெளியானது” ஆர்த்தி ரவி பகீர் பதிவு!!
Aarti Ravi Statement : இரு தினங்களுக்கு முன்னர் நடிகர் ஜெயம் ரவி, தனது விவாகரத்து குறித்து அறிவித்திருந்தார். ஆனால், இன்று அவரது மனைவி ஆர்த்தி இது குறித்த பகீர் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
Aarti Ravi Statement : ஜெயம் ரவி, நேற்றைக்கு முந்தைய தினம், தான் தனது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்த நிலையில், இன்று அவரது மனைவி ஆர்த்தி “தன்னிடம் இது குறித்து அவர் பேசவே இல்லை” என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
ஆர்த்தி ரவி அறிவிப்பு:
ஆர்த்தி ரவியின் முழு அறிவிப்பு இதோ:
“சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்துவிட்டதாக நான் உணர்கிறேன்.
என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல....
மேலும் படிக்க | பிரபலங்கள் ஏன் அதிகமாக விவாகரத்து செஞ்சுகிறாங்க தெரியுமா? 8 முக்கிய காரணங்கள்
ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். ஆனால் என் மீது குற்றம் சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது.
மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது. தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை. காலம் நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இத்தனை காலமாக எங்களுக்கு ஆதரவு மட்டுமன்றி நல்வழி காட்டி வரும் பத்திரிக்கை ஊடக மற்றும் ரசிகப் பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே என்னையும் என் குழந்தைகளையும் இந்த காலகட்டத்தில் தூணாக காத்து நிற்கும். இந்த சோதனையில் இருந்து நாங்கள் மீண்டு வர உங்கள் பிரார்த்தனைகள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.”
அன்புடன்
உங்கள்
ஆர்த்தி ரவி
என்ன நடந்தது?
தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வருபவர், ஜெயம் ரவி. இவரும் இவரது மனைவி ஆர்த்தியும் திருமண வாழ்க்கையில் இருந்து விலக இருப்பதாக கடந்த ஜூன் மாதம் தகவல் வெளியானது. இந்த நிலையில் இதற்கு இரண்டு மாதங்கள் கழித்து இருவரும் பிரிவதை உறுதிப்படுத்தும் வகையில் ஜெயம் ரவி சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இன்னும் இந்த அதிர்ச்சியில் இருந்தே மீளாத ரசிகர்களுக்கு, மேலும் ஷாக் கொடுத்திருக்கிறார், ஆர்த்தி. இந்த விவாகரத்து முடிவை ஜெயம் ரவி தனிச்சையாக எடுத்திருப்பதாகவும், இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு தன்னிடம் இது குறித்து கலந்துரையாடவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதனால், கோலிவுட் திரையுலகில் பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும் படிக்க | ஜெயம் ரவிக்கு விவாகரத்து! காரணம் என்ன? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ