Shariq Haasan Wife Mariya Jennifer : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர், வில்லன் நடிகர் ரியாஸ் கானின் மகன், ஷாரிக் ஹாசன். 2016ஆம் ஆண்டு வெளியான பென்சில் படத்தில் வில்லனாக நடித்த இவர், தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 2விற்குள் நுழைந்தார். இவரது தந்தை வில்லன் நடிகர் என்றால் தாய் வில்லியாக மட்டுமன்றி பலவித குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து பலரை கவர்ந்திருக்கிறார். 


ஷாரிக் ஹாசன்..

 

ஷாரிக், 2018ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 2வது சீசனில் முக்கிய பங்கேற்பாளராக உள்நுழைந்தார். இதில், 49வது நாள் வரை வந்த இவர் பின்னர் எவிக்ட் ஆனார். ஒரு சிலருக்கு இவரை பிடித்திருந்தாலும், பலர் இவரது கேரக்டரை விமர்சனம் செய்தனர். 

 

திருமணம்..

 

ஷாரிக்கால், அவரது தந்தை தாய் அளவிற்கு பெரிதாக ஷைன் ஆக முடியவில்லை. பென்சில், உகரம், டான், ஜிகிரி தோஸ்து, நேற்று இந்த நேரம் உள்ளிட்ட படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். இந்த படங்களிலும் பெரிதாக அவரது கதாப்பாத்திரங்கள் பெரிதாக பேசப்படவில்லை. இந்த நிலையில்தான் அவர் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியானது.

 

இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாத, அவர் மரியா ஜெனிஃபர் என்ற தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இவர்களின் திருமணம், கிறிஸ்தவ முறைப்படி நடைப்பெற்றது. இந்த திருமண புகைப்படங்கள், அப்போது வைரலானது. 

 

மனைவி பேட்டி..

 

ஷாரிக் ஹாசனும் அவரது மனைவியும் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் தாங்கள் இருவரும் எங்கு சந்தித்தோம், எப்படி பேச ஆரம்பித்தோம் என்பது குறித்து பேசியிருக்கின்றனர். அப்போது, மரியா பேசுகையில், தான் சிங்கிள் மதராக தனது பெண் குழந்தையை சிரமப்பட்டு வளர்ததாகவும், தனது மகள் தனக்கு முக்கியமாக தெரிந்ததால் வேறு ஒரு திருமணத்தை பற்றி அப்போது யோசிக்கவில்லை என்றும் குறிப்பிடார். 

 

தனக்கு அமைபவர், மகளை ஏற்றுக்கொண்டாலும், தனது மகள் வருபவரை அப்பாவாக ஏற்றுக்கொள்வாரா என்ற பயம் தனக்கு இருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். ஷாரிக், தனது மகளை நன்றாக பார்த்துக்கொண்டதாகவும் இதை பார்த்த பிறகுதான் தனக்கு அவர் மீது காதலே வந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். ஷாரிக், ஒரு நல்ல கணவர் என்பதை விட, நல்ல அப்பாவாக நடந்து கொள்வதாகவும் அவர் கூறியிருக்கிறார். 


மரியாவின் மகள் பெயர் ஜாரா. இவர், தற்போது பள்ளியில் படித்து வருகிறார். தானும் ஜாராவும் தனியாக இருந்த போது, யாரையும் மிஸ் செய்வதாக தனக்கு தோன்றவில்லை என்று கூறியிருக்கும் அவர், ஷாரிக் தன் வாழ்க்கையில் வந்த பிறகுதான் பல விஷயங்களை தான் மிஸ் செய்வதாக உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், இருவருக்குள்ளும் காதல் ஆரம்பிக்க காரணமாக இருந்ததே ஜாராதான் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மரியா, ஷாரிக்கை விட வயதில் அதிகமானவர் என்றும் பேசப்படுகிறது. 

 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ