Bigg Boss 8 Tamil New Host: ஏழு வருடங்களாக பிக் பாஸ் (Bigg Boss 8 Tamil) நிகழ்ச்சியை நடத்தி வந்த கமல்ஹாசன் தற்போது அதிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது அவருக்கு பதிலாக யார் தொகுப்பாளராக களமிறங்கப் போகிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் தொலைக்காட்சியின் ரியாலிட்டு ஷோக்களில், மக்கள் மனங்களை கவர்ந்த நிகழ்ச்சிகள் ஒரு சில மட்டுமே. அதிலும், ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டுமே இறுதி வரை சுவாரஸ்யம் குறையாமல் செல்கிறது. அப்படி, விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமலும், மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சிகளுள் ஒன்று தான் பிக் பாஸ்.


பிக் பிரதர் என்ற பெயரில் ஆங்கிலத்தில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இந்தியில் பிக் பாஸ் என்கிற பெயரில் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். அதேசமயம் தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதனை, முதல் சீசனில் இருந்து நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) தான் தொகுத்து வழங்கி வந்தார். கிட்டத்தட்ட 8 வருடங்களாக நடைப்பெற்று வரும் இந்த நிகழ்ச்சி தற்போது 8வது சீசனை எட்டி உள்ளது.


மேலும் படிக்க | Kana Kaanum Kaalangal: கனா காணும் காலங்கள் மூன்றாவது சீசன்! யார் யார் நடிக்கிறார்கள்? முழு விவரம்!


100 நாட்கள், 20 போட்டியாளர்கள் 20 போட்டியாளர்கள், வேவ்வேறு டாஸ்க், வாரம் ஒரு எவிக்ஷன்..இறுதியில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போவது யார்? இதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கதைச்சுருக்கம். இதில், வாரம் இரண்டு எபிசோடுகளில் மட்டும் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு போட்டியாளர்களுடன் கலந்துரையாடுவார். அப்போதுதான் குறைவாக வாக்கு வாங்கிய போட்டியாளரும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.


இப்படி கடந்த ஏழு வருடங்களாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த கமல்ஹாசன் தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதை அடுத்து இப்போது அந்த இடத்தை நிரப்ப போவது யார் என்கிற கேள்வி அனைவரின் மனதிலும் எழுப்பியுள்ளது. அதன்படி இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தான் தொகுப்பாளராக களமிறங்கப் போகிறார் என்று தகவல் கசந்துள்ளது. 




இதனிடையே அக்டோபர் மாத முதல் வாரத்தில் சீசன் 8 கோலாகலமாக தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான போட்டியாளர்களும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கூடிய விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. எனினும் இதில் அமலா ஷாஜி, சோனியா அகர்வால், ரோபோ சங்கர், பூனம் பாஜ்வா, அஷ்வின் குமார், சரண்யா மோகன் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக இடம் பெறலாம் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க | Kasthuri Shankar Daughter And Son Pics: கஸ்தூரியின் மகன்-மகளை பார்த்திருக்கிறீர்களா? அப்படியே அம்மாவின் ஜெராக்ஸ் காபி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ