கஸ்தூரியின் மகன்-மகளை பார்த்திருக்கிறீர்களா? அப்படியே அம்மாவின் ஜெராக்ஸ் காபி!

Kasthuri Shankar Daughter And Son Pics : தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக விளங்கியவர் நடிகை கஸ்தூரி. இவருக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 10, 2024, 11:24 AM IST
  • கஸ்தூரிக்கு இரண்டு பிள்ளைகள்
  • அவர்களுடன் எடுத்த ரீல்ஸை பதிவிட்டிருக்கிறார்
  • பார்ப்பதற்கு அவரைப்போலவே இருக்கின்றனர்
கஸ்தூரியின் மகன்-மகளை பார்த்திருக்கிறீர்களா? அப்படியே அம்மாவின் ஜெராக்ஸ் காபி! title=

Kasthuri Shankar Daughter And Son Pics : கோலிவுட் திரையுலகில், முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் கஸ்தூரி. தமிழ் மொழி மட்டுமன்ரி மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த இவர், இப்போது ஒரு சில படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். 

கஸ்தூரியின் கம்-பேக்..

நடிகை கஸ்தூரி, 1991ஆம் ஆண்டு வெளியான ஆத்தா உன் கோயிலிலே படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். அதே ஆண்டில் தொடர்ந்து, இரண்டு படங்களில் நடித்தார். இதையடுத்து தொடர்ந்து வருடத்திற்கு 3 முதல் 5 படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

2001ஆம் ஆண்டு வரை பல படங்களில் நடித்து வந்த இவர், ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்தார். பிறகு 2009 ஆம் ஆண்டு வெளியான ‘தமிழ் படம்’ திரைப்படத்தில் ‘குத்து விளக்கு’ பாடலில் நடனமாடி கம்-பேக் கொடுத்தார். பின்னர் தொடர்ந்து ஒரு சில படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் அம்மா-அண்ணி கேரக்டர்களிலும் வந்தார். கடைசியாக, ஸ்டிக்கர், ராயர் பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். 

சமூக வலைதளங்களில ஆக்டிவ்..

நடிகை கஸ்தூரி, கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்கள் மட்டுமன்றி, அரசியல் களத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். பாஜகவில் உறுப்பினராக இருக்கும் இவர், பிற அரசியல் கட்சிகளையும் அந்த அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களையும் விமர்சித்து வந்தார். எந்த சமூக பிரச்சனை வந்தாலும், அது குறித்து பேசி வைரலாவதும் அவரது வழக்கம். அப்படி பேசி, பல சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கிறார். 

கஸ்தூரியின் குழந்தைகள்..

நடிகை கஸ்தூரி, ரவிகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, சோபின் ரவிகுமார் மற்றும் சங்கல்ப் ரவிகுமார் என ஒரு பெண் குழந்தையும் ஆண் குழந்தையும் இருக்கின்றனர். கஸ்தூரி, தனது குழந்தைகளுடன் அடிக்கடி போட்டாேக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் சில ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | Vimal: அச்சு அசல் விமல் போலவே இருக்கும் அவரின் 2 மகன்கள்! வைரலாகும் குடும்ப புகைப்படம்..

ரீல்ஸ்..

கஸ்தூரி, சமீபத்தில் தனது மகளுடன் சேர்ந்து இரண்டு ரீல்ஸ் வீடியாேக்களை செய்து பதிவிட்டிருந்தார். அதில், தாயும்-மகளும் சேர்ந்து ஆடுவதை பார்த்த ரசிகர்கள் “யார் அம்மா..யார் பொண்ணுன்னு தெரியல..” என்று கமெண்டுகளை வெளியிட்டு வந்தனர். அது மட்டுமன்றி, பலர் கஸ்தூரிக்கு சிறு வயதில் இருந்தே ரசிகனாக இருப்பதாகவும், இப்போதும் அவர் இளமை குறையாமல் அப்படியே இருப்பதாகவும் கருத்துகளை தெரிவித்துள்ளனர். 

கஸ்தூரி, அவரது மகனின் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். ஹேர் கட் செய்வதற்கு முன்பும் பின்பும் எடுக்கப்பட்ட டிரான்ஸ்பர்மேஷன் வீடியாேவை அவர் பதிவிட்டிருக்கிறார். கூடவே, ஒலிம்பிக்கில் தங்கம் வாங்குவதை விட, மகனை ஹேர்கட் செய்ய ஒத்துழைக்க வைப்பது மிகவும் கடினம் என்று அந்த வீடியோவின் கேப்ஷனில் கூறியிருக்கிறார். இந்த குழந்தைகளை பார்த்த கஸ்தூரியின் ரசிகர்கள், அப்படியே அவரை போலவே ஜெராக்ஸ் காபியாக இருப்பதாக கூறி வருகின்றனர். 

 

கஸ்தூரியின் மகள், சோபினி சில ஆண்டுகளுக்கு முன்னர் ரத்த புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டார். இது குறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்த கஸ்தூரி, பெற்றோர் இருவரையும் இழந்த தனக்கு, தன் மகள் புற்றுநோயுடன் போராடுவதை பார்க்கும் போது கவலையாக இருந்ததாக முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | இது விஜய்யா? அவரது மகனா? வித்தியாசமே தெரியல! ஜேசன் சஞ்சயின் ரீசண்ட் போட்டோஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News