Thalapathy 70: விஜய் நடிக்கும் அவரது 69வது படத்தை ஹெச்.வினோத் இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதை ஸ்கிப் செய்து விட்டு, அவரது 70வது படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தளபதி 69 திரைப்படம்:


தற்போது கோட் படத்தில் பிசியாக நடித்து வரும் நடிகர் விஜய். அடுத்து அவரது 69வது படத்தில் நடிக்க இருந்தார். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குவதாக இருந்தது. பொலிட்டிக்கல் த்ரில்லர் பாணியில் உருவாவதாக கூறப்படும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிப்பதாக கூறப்பட்டது. முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு இதுவே விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த படத்தை முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்து உருவாக்க ஹெச்.வினோத் திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கும் வகையிலான தகவல் ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது.


தளபதி 70:


விஜய்-ஹெச்.வினோத் கைக்கோர்க்கும் அவரது 69வது படம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராத நிலையில், தற்போது “தளபதி70” குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை, அட்லீ இயக்குவதாகவும் இதில் விஜய்யுடன் பல்வேறு நடிகர்கள் சேர்ந்து நடிப்பதாகவும் கூறப்ப்படுகிறது. இதில், விஜய்யுடன் சேர்ந்து ஷாருக்கான் நடிப்பதாகவும் இந்த படத்தின் கதையை விஜயேந்திர பிரசாத் எழுதியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. 


மேலும் படிக்க | Thalapathy 69: தளபதி 69 படத்தின் ஷூட்டிங் தாெடக்கம்! எந்த மாதத்தில் தெரியுமா?


ஹெச்.வினோத்தின் நிலை என்ன?


சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் 1 போன்ற படம் மூலம் பிரபலமான ஹெச்.வினோத் அஜித்தை வைத்து மட்டும் வலிமை மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களையும் இயக்கினார். இவர் படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து, கமல்ஹாசனை வைத்து அவரது 233வது படத்தை இயக்க இருந்தார். ஆனால், இந்த படத்தின் கதை எழுதும் பணிகள் முடிவடைவதற்கு முன்பாகவே படத்தின் பிற பணிகள் பாதியில் கைவிடப்பட்டது. இதற்கு கமல்ஹாசனுக்கு அவர் கூறிய கதை பிடிக்காததுதான் காரணம் என சொல்லப்பட்டது. இதையடுத்து, இந்த கதையை கொஞ்சம் மெருகேற்றித்தான் விஜய்யை நடிக்க வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இப்போது அதுவும் கைவிடப்படும் நிலையில் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இதனால், தளபதி 69 படத்தின் நிலை என்ன என்பது குறித்து ரசிகர்கள் கவலை கொண்டிருக்கின்றனர். 


முழு நேர அரசியலில் விஜய்..


நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கினார். அப்போதே, தான் கமிட் ஆகியிருக்கும் படங்களில் நடித்து முடித்த பிறகு திரையுலகில் இருந்து விலகி தான் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாக கூறியிருக்கிறார். வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இவர் விரைவில் மாநாடு ஒன்றினை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் விஜய் தனது அரசியல் வாழ்க்கையில் சில முக்கிய முடிவுகளை எடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | Thalapathy 69 : தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி கன்ஃபார்ம் ‘இவர்தான்’! யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ