நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க் என்ன தெரியுமா? படிக்கிற பையன் போல..

Actor Vijay 10th Mark : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தனது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் என்ன மதிப்பெண் பெற்றார் என்பது உங்களுக்கு தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : May 11, 2024, 04:52 PM IST
  • முழுநேர அரசியலில் இறங்கும் விஜய்
  • நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க்
  • எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க் என்ன தெரியுமா? படிக்கிற பையன் போல.. title=

Actor Vijay 10th Mark : கோலிவுட் திரையுலகில், தற்போது டாப் நட்சத்திரங்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஹீரோவாக கலக்கி வரும் இவருக்கு பல கோடி பேர் ரசிகர்களாக இருக்கின்றனர். தற்போது, இவர் GOAT படத்தில் நடித்து வருகிறார். 

GOAT பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் விஜய்!

வெங்கட் பிரபுவுடன் விஜய் முதன் முறையாக கைக்கோர்த்திருக்கும் படம், GOAT (Greatest Of All Time). இந்த படம் சையின்ஸ் ஃபிக்ஷன் கதையாக உருவாகி வருகிறது. இதில் விஜய்யுடன் சேர்ந்து பிரசாந்த், அஜ்மல், மைக் மோகன், பிரபு தேவா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங், சென்னை, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடைப்பெற்று வந்ததை தொடர்ந்து, தற்போது வெளிநாடுகளிலும் நடைபெறுகிறது. இதற்காக விஜய் வெளிநாடு சென்றுள்ள வீடியோவும் கூட, இணையத்தில் வைரலானது. 

விஜய், இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். இது, தந்தை-மகன் தோற்றங்களா, அல்லது எதிர்காலம்-நிகழ்காலத்தில் இருக்கும் ஒரே ஆளின் இரு தோற்றங்களா என்பது படம் வெளியானவுடன்தான் தெரியவரும். 

பள்ளி மாணவர்களை சந்திக்கும் விஜய்!

சமீபத்தில் 12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வு முடிவுகளை சந்தித்த மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய், விரைவில் சந்திப்போம் என்று தனது ட்விட்டர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார். 

கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை சந்தித்த விஜய், அவர்களுக்கு பரிசுகளை வழங்கி மேடையில் கெளரவித்தார். இது பெரிய நிகழ்வாக, பெரும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது. இதே போல, இவர் இந்த வருடமும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | Actor Vijay: பேண்டேஜ் உடன் வாக்களித்த விஜய்... படப்பிடிப்பில் காயமா?

விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க்!

நடிகர் விஜய், Vis.Com வரை படித்திருக்கிறார். இவர், தனது பள்ளிப்படிப்பை சென்னை விருகம்பக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்றார். 10ஆம் இவர் அப்டித்த போது 10ஆம் வகுப்பு தேர்வில் மொத்த மதிப்பெண்கள், 1100க்கு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மொத்தம் 1100 மதிப்பெண்களுக்கு, 711 மதிப்பெண்களை விஜய் எடுத்ததாக கூறப்படுகிறது. 

தமிழில், 200க்கு 155  மார்க் எடுத்த அவர், கணிதத்தில் 95 மதிப்பெண்களையும்ம், ஆங்கிலத்தில் 122 மற்றும் அறிவியலில் 206 மதிப்பெண்களையும் பெற்றிருக்கிறார். சமூக அறிவியலில் இவர் 122 மதிப்பெண்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில், 10ஆம் வகுப்பில் சுமார் 65 சதவிகிதத்தை பெற்றிருக்கிறார் விஜய். இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருவதை தொடர்ந்து, இந்த தகவல் உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை. 

முழு நேர அரசியலில் களமிறங்கும் விஜய்!

நடிகர் விஜய், தனது 69வது படத்துடன் தமிழ் திரையுலகிற்கு முழுக்கு போட இருக்கிறார். இவரது கடைசி படம் அரசியல் த்ரில்லராக இருக்கும் என்றும் இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்துடன் முழு நேரமாக அரசியலில் மட்டும் கவனம் செலுத்த இருக்கும் விஜய், 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட இருப்பதையும் முன்னரே அறிவித்து விட்டார். கடந்த பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் இவர் அரசியல் கட்சியை ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | வாய்பிளக்க வைக்கும் நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு-அடியாத்தி..இத்தனை கோடியா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News