Latest News Mrunal Thakur Tamil Movie : வட இந்தியாவை சேர்ந்த நடிகை மிருணால் தாகூர், லவ் சோனியா என்ற இந்தி படம் மூலம் முதன்முறையாக திரையுலகிற்குள் நுழைந்தார். அதற்கு முன்னர் கும் கும் பாக்யா (இனிய இரு மலர்கள்) தொடரில் நாயகிகளுள் ஒருவராக நடித்தார். இந்த தொடர் ஹிட் ஆனாலும், இவர் நடித்த படங்கள் பெரிதாக ரசிகர்களால் வரவேற்கப்படவில்லை. இருப்பினும் கோஸ்ட் ஸ்டோரீஸ், சூப்பர் 30, ஜெர்ஸி உள்ளிட்ட் படங்கள் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2022ஆம் ஆண்டு, சீதா ராமம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அவர் துல்கர் சல்மானுக்கு ஜாேடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் நடித்திருந்த ‘சீதா மாகாலட்சுமி’ கதாப்பாத்திரம் தெலுங்கு ரசிகர்களை தாண்டி தமிழ் ரசிகர்களின் மனங்களையும் கவர்ந்தது. இதனாலேயே இவர் நடிக்கும் படங்களை ரசிகர்கள் தேடித்தேடி பார்க்க ஆரம்பித்தனர். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டு இவர் நானிக்கு ஜோடியாக நடித்த ‘ஹாய் நன்னா’ திரைப்படமும் நல்ல வரவேற்பினை பெற்றது.


புதிய படம்..


மிருணாள் தாகூர் என்னதான் தென்னிந்திய படங்களில் நடித்திருந்தாலும், அவர் இன்னும் தமிழ் படம் ஒன்றில் கூட நடிக்கவில்லையே என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதை தவிர்க்கும் வகையில் அவர் புது படம் ஒன்றில் கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 


ஜோடியாக நடிக்கும் ஹீரோ..


மிருணாள் தாகூர் தமிழில் முதன் முதலில் நடிக்க உள்ள படம், ‘சூர்யா 45’ என கூறப்படுகிறது. 49 வயதாகும் நடிகர் சூர்யா தனது 45வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம், ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை தூண்டிய படமாக இருக்கிறது. காரணம், கடந்த 2 ஆண்டுகளாக சூர்யாவின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் தற்போது ‘கங்குவா’ படம் வெளியாவதை தொடர்ந்து கூடிய விரைவிலேயே ‘சூர்யா 44’ படமும் ரிலீஸாகிவிடும் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அவர் தனது 45வது படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குபவர், ஆர்.ஜே.பாலாஜி. 



மேலும் படிக்க | Suriya: கங்குவாவை தொடர்ந்து பொங்கலுக்கு வெளியாகும் சூர்யா 44 படம்?


நடிகரும், இயக்குநருமான இவர் ஏற்கனவே மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேஷம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். இவர், சூர்யாவின் படத்தை இயக்குவதாலும் ரசிகர்கள் இப்படத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டுள்ளனர். முதலில் ’சிகப்பு மஞ்சள் பச்சை’ பட நாயகி காஷ்மிரா பர்தேசி இந்த படத்தில் நடிப்பதாக கூறிய நிலையில், மிருணால் தாகூரை படக்குழுவினர் செலக்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மிருணாள் தாகூர், சூர்யா நடிக்கும் இந்த படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இவரை, ஆர்.ஜே.பாலாஜி தொகுப்பாளராக இருக்கும் போதும், தனது பாட்காஸ்டிற்காகவும் பேட்டி எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மிருணாள் தாகூரின் அடுத்தடுத்த படங்கள்..


மிருணால் தாகூர், தெலுங்கில் மட்டும் அல்லாது இந்தியிலும் பல படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். பூஜா மேரி ஜான், ஹாஇ ஜவனீ தோ இஷ்க் ஹோனா ஹாய், சன் ஆஃப் சர்தார் 2, தும் ஹோ தோ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவற்றில் சில ரிலீஸிற்கு தயாராகி வருகின்றன. 


மேலும் படிக்க | Suriya 45: சூர்யாவின் 45வது படத்தை இயக்கும் RJ பாலாஜி யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ