Nayanthara Instagram Story About Karma : நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படம், நெட்ஃப்ளிக்ஸில் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தின் டிரைலரில், நானும் ரெளடி தான் படத்தின் BTS காட்சிகளில், 3 விநாடிகள் வீடியோ இடம் பெற்றிருந்தது. இந்த வீடியோவை விரைவில் நீக்கவில்லை என்றால், ரூ.10 கோடியை வழங்க வேண்டும் என்று கூறி அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், நயன்தாராவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இது, பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஒரு சாரார், நயன்தாராவிற்கு ஆதரவாக கொடி பிடிக்க, இன்னொரு தரப்பினர் தனுஷ் செய்தது தவறில்லை என இணையத்தில் விவாதிக்க தொடங்கினர். இதையடத்து, நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று, வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வழக்கு தொடர்ந்த தனுஷ்!


நடிகை நயன்தாரா, தனது படம் வெளிவருவதற்கு முன்பு நடிகர் தனுஷிற்கு நேரடியாகவே 3 பக்க கடிதம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டார். அதில், அவரை “பிறர் துன்பத்தில் இன்பம் காணும் நபர்” என்று குறிப்பிட்டிருந்த அவர், “இசை வெளியீட்டு விழாக்களில் பேசுவது போல, பாதி கூட நீங்கள் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார். நானும் ரெளடி தான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்த, தடையின்மை சான்றிதழ் கொடுக்க 2 ஆண்டுகளாக தனுஷ் தங்களை அலைக்கழித்ததாக குறிப்பிட்டிருந்த நயன்தாரா, தற்போது இந்த வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருப்பது வன்மத்தின் காரணமாகத்தான் என்று கூறியிருந்தார். 


தனுஷின் நோட்டீஸை மீறி, நயன்தாரா பியான்ட் தி ஃபேரி டேல் படத்தில் நானும் ரெளடி தான் படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, நயன்தாரா மீது நடிகர் தனுஷ் வழக்கு தொடர, சென்னை உயர்நீதி மன்றம் சில நாட்களுக்கு முன்பு அனுமதியளித்தது. இதையடுத்து இருவும் சட்டப்போரில் சந்திக்க உள்ளனர். 


நயன்தாராவின் பதிவு!


நிலைமை, இப்படி ஒருபுறமிருக்க நயன்தாரா நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “நீங்கள் பொய்களை வைத்து ஒருவரின் வாழ்க்கையை கெடுக்க நினைத்தா, கர்மா உங்களுக்கு வட்டியும் முதலுமாக திருப்பி தரும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


மேலும் படிக்க | நயன்தாரா மீது தனுஷ் கோவப்பட இந்த சம்பவம் தான் முதல் காரணமா?



மறைமுக தாக்குதலா? 


நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று சட்டப்பூர்வமாக பிரிந்தனர். இதைத்தான், “கர்மா உங்களுக்கு வட்டியும் முதலுமாக திருப்பி தரும்” என்று நயன்தாரா கூறுகிறாரோ என்று ரசிகர்கள் இணையத்தில் கருத்துகளை பரிமாறி வருகின்றனர். இருப்பினும், தனுஷிற்கு அந்த கடிதத்தை எழுதியதை தவிர, நயன்தாரா வேறு எந்த பதிவையும் அதன் பிறகு வெளியிடவில்லை. 


தனுஷ் எதுவும் சொல்லலையே..!


நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மாறி மாறி சமூக வலைதளங்களில் தனுஷை தாக்கி பதிவிட, தனுஷ் இது குறித்து கண்டு கொள்ளாதது போல் இருந்தார். தனது சமூக வலைதள பக்கங்களிலோ, பத்திரிகையாளர்கள் சந்திப்பிலோ அவர் இது குறித்து எதுவுமே பேசவில்லை. இருப்பினும் திரை பிரபலம் ஆகாஷ் பாஸ்கரனின் திருமணத்தில் நயன்தாரா-தனுஷ் சந்தித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. ஆனால், இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் முகத்தை திருப்பிக்கொண்டனர். இதற்கு அடுத்த, நயன்தாராவின் முன்னாள் காதலரான நடிகர் சிம்புவை அதே விழாவில் சந்தித்து நட்பு பாராட்டியது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | நயன்தாராவுடன் சண்டை..பிரச்சனைக்கு பின் தனுஷ் நக்கலாக போட்ட முதல் பதிவு!!


மேலும் படிக்க | தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து: பிள்ளைகள் யாத்ரா-லிங்கா யாருடன் இருப்பார்கள்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ