தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து: பிள்ளைகள் 2 பேரும் யாருடன் இருப்பார்கள்?

Dhanush Aishwarya Divorce : நடிகர் தனுஷிற்கும், ஐஸ்வர்யாவிற்கும் விவாகரத்து ஆனதை தொடர்ந்து, அவரது பிள்ளைகள் யாரிடம் வாழ்வார்கள் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Dec 1, 2024, 01:02 PM IST
  • தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து!
  • அதிகாரப்பூர்வமாக பிரிந்தனர்..
  • பிள்ளைகள் யாருடன் வாழ்வார்கள்?
தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து: பிள்ளைகள் 2 பேரும் யாருடன் இருப்பார்கள்? title=

Dhanush Aishwarya Divorce : இந்த வருடம், கோலிவுட் திரையுலகில் பல்வேறு விவாகரத்துகள் நடைப்பெற்று விட்டது. அந்த லிஸ்டில், தனுஷ்-ஐஸ்வர்யாதான் டாப். இவர்கள், சமீபத்தில் சட்ட ரீதியாக பிரிந்தனர். 

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு:

இயக்குநரும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவிற்கும், தனுஷிற்கும் 2004ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கையில், திடீரென்று புயல் வீச தாெடங்க, இருவரும் 2022ஆம் ஆண்டு பிரிந்து வாழ முடிவு செய்திருப்பதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இந்த செய்தி, ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. 

2 ஆண்டுகள் கடந்த நிலையில், தங்களின் பிரிவு நேரத்தில் ஐஸ்வர்யா-தனுஷ் ஒரே நிகழ்ச்சிக்கு வருவதையோ, ஒன்றாக சந்தித்து கொள்ளவோ இல்லை. ஆனால், பிள்ளைகளின் பள்ளி விழாக்களில் மாறி மாறி கலந்து கொண்டனர். 

இழுத்தடிக்கப்பட்ட விவாகரத்து:

2022ஆம் ஆண்டு, ஜனவரியில் தாங்கள் பிரிய இருப்பதாக அறிவித்த இவர்கள், அதன் பிறகு விவாகரத்து குறித்தோ, தங்களின் பிரிவு குறித்தோ எங்குமே பேசவில்லை. இதையடுத்து, ரஜினிகாந்தின் குடும்பத்தினரும் தனுஷின் குடும்பத்தினரும் இவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் வீணாகியிருக்கிறது. இருவரும், தாங்கள் பிரிவதில் உறுதியாக இருந்திருக்கின்றனர். 

தனுஷ்-ஐஸ்வர்யாவின் விவாகரத்து வழக்கு, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது. ஆனால், ஒவ்வொரு முறை இந்த வழக்க விசாரணைக்கு வரும் போதும், தனுஷ் வந்தால் ஐஸ்வர்யா வராமல் இருந்தார்,  ஐஸ்வர்யா வந்தால் தனுஷ் வராமல் இருந்தார். இதையடுத்து, தனுஷிற்கும் ஐஸ்வர்யாவிற்கும் பிரிவதற்கு மனமில்லை எனவும், இதனால்தான் இருவரும் நீதிமன்றத்திற்கு வருவதில்லை என்றும் கூறப்பட்டது. 

அதிகாரப்பூர்வ பிரிவு:

இழுத்தடிக்கப்பட்ட ஐஸ்வர்யா-தனுஷ் விவாகரத்து வழக்கு, தற்போது ஒரு வழியாக முடிவிற்கு வந்திருக்கிறது. இந்த வழக்கின் கடைசி ஹியரிங், நவம்பர் 27ஆம் தேதியான நேற்று நடைப்பெற்றது. இதில், தனுஷ்-ஐஸ்வர்யா இருவருமே நேரில் ஆஜராகினர். இந்த நிலையில், இவர்கள், அதிகாரப்பூர்வமாக பிரிந்து விட்டனர். 

மேலும் படிக்க | ஐஸ்வர்யா-தனுஷ் பிரிவுக்கு ‘இவர்’தான் காரணமா! ரசிகர்கள் அதிர்ச்சி..

பிள்ளைகள் யாரிடம் வளருவார்கள்:

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிந்திருப்பதை தொடர்ந்து, அவரது குழந்தைகள் யாத்ரா மற்றும் லிங்கா யாரிடம் வளர்வார்கள் என்பது குறித்த கேள்வி, ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக எப்படி கோ-பேரண்ட்கிங் முறையில் தங்களின் குழந்தைகளை வளர்த்தார்களோ, அதே போலவே இப்போதும் தனுஷும்-ஐஸ்வர்யாவும் வளர்ப்பார்கள் என்று கூறப்படுகிறது. 

சர்ச்சையில் சிக்கிய தனுஷ்:

நடிகர் தனுஷ், கடந்த சில வாரங்களாகவே சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகும் பெயர்களில் ஒன்றாக இருக்கிறார். 3 விநாடிகள் வீடியோவிற்கு நயன்தாராவிடம் 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியது பெரும் சர்ச்சையாக மாறியது. காரணம், தனுஷும் நயன்தாராவும் ஒரு காலத்தில் நல்ல நண்பர்களாக இருந்தனர். இதையடுத்து இந்த சர்ச்சையின் தாக்கம் குறைவதற்குள், இருவரும் ஒரே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முகத்தை இருவரும் திருப்பிக்கொண்டனர். அதற்கு அடுத்த நாளே, தனுஷ், நயன்தாராவின் முன்னாள் காதலரான நடிகர் சிலம்பரசனை அதே திருமண நிகழ்ச்சியின் சங்கீத் நிகழ்வில் சந்தித்து ஆரத்தழுவிக்கொண்டார். இப்போது, நயன்தாராவின் ஆவணப்படத்தில், நானும் ரௌடி தான் படத்தின் வீடியோவை உபயோகித்ததற்கு எதிராக நயன் மீதும், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் மீதும் அவர் கோர்டில் வழக்கு தொடுத்து இருக்கிறார். 

மேலும் படிக்க | மீண்டும் இணையும் ஐஸ்வர்யா-தனுஷ்?! பிரபலம் சொன்ன தகவல்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News