நடிகை சமந்தாவின் தந்தை மரணம்! மனமுடைந்து அவர் போட்ட பதிவு..
Actress Samantha Father Joseph Prabhu Passes Away : நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு காலமாகியிருக்கிறார். இது குறித்து, சமந்தா ஒரு பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
Actress Samantha Father Joseph Prabhu Passes Away : தென்னிந்திய திரையுலகின் முக்கிய நடிகையாக வலம் வரும் சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தை குறித்த பதிவை வெளியிட்டிருக்கிறார்.
சமந்தா தந்தை மரணம்:
கோலிவுட் திரையுலக நடிகை சமந்தாவின் வாழ்க்கையில், கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து சோகமான விஷயங்கள் நடந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, தனது காதல் கணவர் நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற இவர், அதன் பிறகு படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். கடந்த 2 ஆண்டுகளில், அவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக ரசிகர்களை சென்று சேரவில்லை. இதற்கு இடையில், மயோசிடிஸ் நோயினாலும் பாதிக்கப்பட்டார்.
கடந்த சில மாதங்களாக சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து சற்று ரிலாக்ஸ் செய்து வந்த இவரை, சமீப காலமாகத்தான் கேமரா முன்பு பார்க்க முடிந்தது. இவர், இந்தியில் சிட்டெல்-ஹனி பனி தொடரில் நடித்திருக்கிறார். இந்த தொடரின் ப்ரமோஷன் விழாக்களில் இவர் கலந்து கொண்டு வந்த நிலையில், தற்போது அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இவரது தந்தை, ஜோசப் பிரபு காலமாகியிருக்கிறார். இதையடுத்து சமந்தா, “Until We Meet Again Dad” என்ற பதிவை, இதயம் நொருங்கிப்போன இமோஜியுடன் பதிவிட்டு இருக்கிறார்.
ஜோசப் பிரபு:
சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு ஒரு தெலுங்கு ஆங்லோ-இந்தியன் ஆவார். இவரது மனைவி, கேரளாவை சேர்ந்தவர். இவர்கள், சென்னையில் இருக்கும் பல்லாவரத்தில் வசித்து வந்தனர். தற்போது, சமந்தா சென்னை விமான நிலையம் அருகில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. சமந்தா நடிகையாவதற்கும், தனது துறையில் சாதிப்பதற்கும் அவரது தந்தை ஜோசப் பெரிய அளவில் ஆதரவாக இருந்திருக்கிறார். சமந்தா குறித்து அவதூறுகள் வந்த போதும், அவர் திருமணம் மற்றும் விவாகரத்து நடந்த சமயத்திலும் அவரது தந்தை இவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். தற்போது, இவரது இறப்பு, சமந்தாவின் வாழ்வில் பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. இவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை.
நடிகை சமந்தா, தனக்கும் நாக சைதன்யாவிற்குமான விவாகரத்தை ஏற்றுக்கொள்ள தனது தந்தைக்கு பல நாட்கள் எடுத்ததாக முன்னர் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
மேலும் படிக்க | சமந்தாவுக்கு 39 வயது நடிகருடன் காதல்?! இன்ஸ்டா போஸ்டால் வெளிவந்த விஷயம்!
மேலும் படிக்க | Samantha: சமந்தாவிற்கு 2வது திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ