Latest News Thalapathy 69 Movie : தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக விளங்கும் நடிகர் விஜய், விரைவில் திரையுலகை விட்டு விலகி அரசியலில் முழு நேரமாக நுழைய இருக்கிறார். இந்த நிலையில் அவரது கடைசி படம் குறித்த அப்டேட்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தளபதி 69:


கடந்த பிப்ரவரி மாதம், ‘தமிழக வெற்றிக்கழகம்’ அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், அடுத்த ஆண்டிற்குள் தன் கைவசம் இருக்கும் படங்களை முடித்து விட்டு, திரையுலகை விட்டு விலகி முழு நேரமாக அரசியலில் இறங்க இருக்கிறார். இது குறித்த அறிவிப்பினை வெளியிடும் பாேதே, தனது திரையுலக பயணத்திற்கும் முழுக்கு போட்டு விட்டு, முழு நேரமாக அரசியலில் இறங்குவதாக தெரிவித்து விட்டார். இந்த நிலையில், அவர் நடிதத தி கோட் (The Greatest Of All Time) திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, அவர் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். 


யார் யாரெல்லலாம் நடிக்கிறார்கள்? 


விஜய்யின் கடைசி படம் என்பதாலோ என்னவோ, தளபதி 69 படத்தின் மீது பலருக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த படத்தை, ஹெச்.வினோத் இயக்குகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், சமீபத்தில் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், “இது கண்டிப்பாக 200% விஜய்யின் படமாக இருக்கும்” என்று தெரிவித்தார். இதையடுத்து, இதில் நடிக்க இருப்பவர்களின் விவரங்களும் ஒவ்வொன்றாக வெளியானது. 


விஜய்யுடன் 20 வருடங்கள் கழித்து..


விஜய், 20 வருடங்களுக்கு முன்னர் தன்னுடன் பல படங்களில் நடித்த சிம்ரனுடன் சேர்ந்து தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். 48 வயதாகும் சிம்ரன், தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் விஜய்யுடன் துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, ஒன்ஸ் மோர், உதயா உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்த இவர் தற்போது தளபதி 69 படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 



நடிகர் விஜய், கடைசியாக வெளியான தனது சில படங்களில், பல வருடங்களுக்கு முன்னர் தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகைகளுடன் சேர்ந்து நடித்து வருகிறார். கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட படங்களில் த்ரிஷாவுடன் சேர்ந்து நடித்த விஜய், கடந்த ஆண்டு அவருக்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்திருந்தார். தி கோட் படத்திலும் ‘வசீகரா’ படத்திற்கு பிறகு, சினேகாவுடன் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | ‘தளபதி 69’ இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்.. வேறு யார் தெரியுமா? ஐயோ இவரா!


ஜோடியாக..


தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த இவர்கள், இப்போது மீண்டும் தளபதிட 69 படத்தில் ஜோடி சேர இருக்கின்றனர். இதற்கான டெஸ்ட் ஷூட்டிங் நடந்து முடிந்து விட்டதாகவும், இதில் சமந்தா நடிப்பது கிட்டத்தட்ட ஓகே ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது.


இன்னொரு நாயகி..


சமந்தா மட்டுமல்லாமல் தளபதி 69 படத்தில் இன்னொரு பிரபல நடிகையும் நடிக்கிறார். அவர் வேறு யாருமில்லை, சமீபத்தில் ‘பிரேமலு’ படம் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமான மமிதா பைஜூதான். வழக்கமாக, மலையாள நடிகைகளுக்கு தமிழ் நாட்டில் மவுசு அதிகமாக இருக்கும். அந்த வகையில், மமிதாவிற்கும் தமிழ் ரசிகர்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இவர் ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘ரெபெல்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். 


மேலும் படிக்க | Thalapathy 69 : விஜய் ரசிகர்களுக்கு ஷாக்!‘தளபதி 69’ படம் டிராப்பா?!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ