Tamilaga Vettri Kazhagam Flag Meaning : தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை, நடிகர் விஜய் பனையூரில் இருக்கும் தனது கட்சியின் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இதற்கு பின்னால் இருக்கும் அர்த்தத்தையும், அந்த நிகழ்ச்சியில் நடந்த சம்பவங்களையும் இங்கு பார்க்கலாம்.
த.வெ.க கொடி அறிமுகம்:
நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்தார். இதையடுத்து, தான் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில், ஆகஸ்ட் 22ஆம் தேதியான இன்று அவரது கட்சியின் கொடியை அவர் அறிமுகப்படுத்துவதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பனையூரில் இருக்கும் விஜய்யின் த.வெ.க கட்சி அலுவலகத்தில் அவரது கட்சிக்கொடி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்விழாவில் பேசிய விஜய் உறுதிமொழி எடுத்த பின்னர் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து அதை கம்பத்தில் ஏற்றினார்.
கட்சி கொடியின் அர்த்தம்:
வழக்கமாக, எந்த அரசியல் கட்சி கொடியை அறிமுகப்படுத்தினாலும் அதற்கு பின்னால் ஒரு அர்த்தம் இருக்கும். அந்த வகையில், விஜய்யின் த.வெ.க கட்சி கொடிக்கு பின்னாலும் ஒரு அர்த்தம் இருக்கிறது. சிகப்பு நிற கொடியில், இரு யானைகள் பீறிட்டு நிற்க, அதற்கு நடுவே வாகை மலர் இருப்பது போல அந்த கொடியில் வரைபடங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதில், வாகை மலரை சுற்றி இருக்கும் வளையத்தில் நட்சத்திரங்களும் இடம் பெற்றிருக்கிறது.
பாதுகாப்பு:
யானையை அனைவரும் வலுவான மிருகமாக பார்க்கிறோம். அதன்படி, இந்த கட்சி கொடியில் இருக்கும் யானைக்கு அர்த்தம் வலுவானது என்று கூறப்படுகிறது. மேலும், அவைகளுக்கு நடுவே இருப்பது ‘வாகை மலர்’ ஆகும். இந்த மலருக்கு இன்னொரு அர்த்தம் ‘வெற்றி’ என்பதுதான். அது மட்டுமன்றி, பூக்கள் மிகவும் மிருதுவானவை, அதனை பாதுகாக்க வலுவான ஒன்று அதை சுற்றி இருக்க வேண்டும். எனவே, அந்த பூ அழகாக வளர அதை சுற்றி வலுவான மிருகங்களை பாதுகாப்பிற்கு வைத்திருப்பது, இக்கொடியின் அர்த்தமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
வெற்றி:
வாகை மலர் வெற்றியை குறிக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். நடிகர் விஜய்யும், இதுவரை அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்து மேடையில் பேசிய போதெல்லாம் “வெற்றி நிச்சயம்” என்று கூறி வருகிறார். எனவே, தான் 2026ஆம் ஆண்டில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர் வாகை மலரை சிம்பாளிக்காக வைத்திருக்கிறாரோ என்ற சந்தேகமும் மக்களுக்கு எழுந்திருக்கிறது.
மேலும் படிக்க | விநாயகருக்கு உகந்த நாளில் தவெக கொடியை அறிமுகம் செய்யும் விஜய்..! முழு விவரம்
கலாச்சாரம்:
ஒட்டுமொத்த இந்தியாவுமே வெவ்வேறு வகையான மக்களையும், மொழியையும் கொண்ட ஒரே ஜனநாயக நாடாக உள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு அந்த அனைத்து கலாச்சாரங்களையும் போற்றி, பாதுகாத்து வருகிறது. யானை மற்றும் வாகை மலருக்கு இன்னொரு அர்த்தம் அனைத்தையும் ஆரத்தழுவுவது என்றாகுமாம். எனவே, இதை தமிழக மக்களுடன் பறைசாற்றும் நோக்கில், விஜய் இதை இரண்டையும் தன் கொடியில் இணைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
விஜய் அர்த்தம் சொல்வாரா?
த.வெ.க கட்சி கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய், இதனை ஒரு முக்கியமான நாள் என்று கூறினார். மேலும், இந்த கொடிக்கான அர்த்தத்தை நேரம் வரும் போது கூறுவதாகவும் அதுவரை அனைவரும் கெத்தாக சுற்றலாம் என்றும் கூறினார். இதனால், விஜய் 2026ஆம் ஆண்டு தேர்தலில் முழுமையாக இறங்கி விட்டதாக பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | விஜய் கட்சி கொடி அறிமுகம் : இரண்டு யானைகளுக்கு நடுவே வாகை மலர்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ