விஜய், சமந்தாவை உள்பட தளபதி 69-ல் இணைந்திருக்கும் பிரபலங்கள் யார்? லிஸ்ட் இதோ!

Thalapathy 69 Cast : தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதே போல, இவர்களுடன் இணையும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.   

Written by - Yuvashree | Last Updated : Jul 2, 2024, 02:58 PM IST
  • தளபதி 69 படத்தின் நடிகர்கள்
  • விஜய் சமந்தாவை தவிர வேறு யார்?
  • ஹெச்.வினோத் இசையமைக்கிறார்
விஜய், சமந்தாவை உள்பட தளபதி 69-ல் இணைந்திருக்கும் பிரபலங்கள் யார்? லிஸ்ட் இதோ! title=

Thalapathy 69 Cast : தமிழ் திரையுலகின் டாப் நடிகராக இருக்கும் நடிகர் விஜய், இன்னும் சில காலத்தில் சினிமாவை விட்டு விலக இருக்கிறார். இவர் கடைசியாக நடிக்க இருக்கும் படம்தான், தளபதி 69. 

தளபதி 69 திரைப்படம்:

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோட்’ திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், தனது 69வது படத்துடன் திரையுலகிற்கு முழுக்கு போட இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பலரும் ‘தளபதி 69’ என்றே குறிப்பிட்டு வருகின்றனர். இந்த படத்தை இயக்க இருப்பது, வெற்றி மாறனா, கார்த்திக் சுப்பராஜா, அட்லீயா என பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தது. இறுதியில், ஹெச்.வினோத்தான் இந்த படத்தின் இயக்குநர் என தீர்மானம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

கமல்ஹாசனின் 233வது படத்தை இயக்க இருந்த ஹெச்.வினோத் அந்த படம் டிராப்பாகி விட்டதால் அதன் கதையையே விஜய்க்காக மறு அமைப்பு செய்து கதை பாணியை மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இது ஒரு அரசியல் படம் என்றும் விஜய் சினிமா பயணத்தை முடித்துக்கொண்டு அரசியலுக்குள் நுழைய இருப்பதால் அவருக்கு ஏற்றார் போல சில காட்சிகள் இந்த படத்தில் எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

விஜய்க்கு ஜோடியாக சமந்தா..

நடிகர் விஜய்க்கு, தளபதி 69 படத்தில் ஜோடியாக நடிக்க த்ரிஷா, மிருணாள் தாகூர் உள்ளிட்ட நாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இறுதியில் இதில் கதாநாயகியாக நடிக்க சமந்தா தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. சமந்தாவும் விஜய்யும் இதற்கு முன்னர் மூன்று படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர். 2014ஆம் ஆண்டு வெளியான கத்தி படத்தில் ஒன்றாக தோன்றிய இவர்கள், அட்லீ விஜய்யை வைத்து இயக்கிய தெறி மற்றும் மெர்சல் ஆகிய படங்களிலும் ஒன்று சேர்ந்து நடித்தனர்.

மேலும் படிக்க | Thalapathy 69: தளபதி 69 படத்தின் ஷூட்டிங் தாெடக்கம்! எந்த மாதத்தில் தெரியுமா?

படத்தில் இணைந்தவர்கள்..

சமந்தா விஜய் மட்டுமன்றி தளபதி 69 படத்தில் இன்னும் சில பிரபலங்களும் இணைந்திருக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது தமிழ் சினிமாவின் பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான கத்தி, பீஸ்ட், லியோ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Thalapathy 69

தளபதி 69 படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. சத்யன்-சூர்யன் ஆகியோர் ஒளிப்பதிவாளர்களாக இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு, வரும் அக்டோபர் மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டாப்பில் இருக்கும் போதே விலகும் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமன்றி, ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகில் இருக்கும் டாப் நட்சத்திரங்களுள் ஒருவராக விளங்குகிறார் நடிகர் விஜய். தற்போது பல லட்சம் ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகராகவும் வலம் வருகிறார். சம்பளமும் கோடிக்கணக்கில் வாங்குகிறார். இவையணைத்தையும் விட்டுவிட்டு, தன் கடைசி படத்தில் நடித்து முடித்த பின்பு முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாக அறிவித்திருக்கிறார். இதனால் இவரது ரசிகர்கள் மட்டுமன்றி, இவரை பிடிக்காதவர்கள் கூட கொஞ்சம் சோகமடைந்திருக்கின்றனர். 

மேலும் படிக்க | தளபதி 69 படத்தின் கதை இதுதான்! கசிந்தது தகவல்..அதிர்ச்சியில் படக்குழு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News