Samantha Pregnant : கடந்த சில வாரங்களாகவே, இணையத்தில் சமந்தா குறித்த தகவல்களும், அவர் என்ன செய்கிறார், எங்கு இருக்கிறார் என்பது குறித்த அப்டேட்டுகளும் வெளியாகி வருகிறது. அதே போல, அனைத்து ஊடகங்களின் கண்களும் நாகார்ஜுனாவின் குடும்பத்தினர் மீது இருக்கிறது. இதையடுத்து, இவர்களின் குடும்பத்தில் அடுத்தடுத்து மகிழ்ச்சி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அவை குறித்து இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாக சைதன்யா 2வது திருமணம்:


தெலுங்கு திரையுலகில் பெரிய குடும்பமாக இருக்கிறது, நாகார்ஜுனாவின் குடும்பம். இவரது மூத்த மகன் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை காதலித்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், இந்த திருமணம் 2021ஆம் ஆண்டே விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து, சமந்தா சிங்கிளாக தனியாக வசித்து வர, நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபலாவை விரைவில் கரம் பிடிக்க இருக்கிறார். 


இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடந்தது. இந்த நிச்சயதார்த்த விழாவின் பாேதே, ரசிகர்கள் பலர் சமந்தாவிற்கு நாக சைதன்யான துரோகம் செய்து விட்டதாக கூறி, திட்டி தீர்த்தனர். 


சமந்தா கர்ப்பம்!


திடீரென்று, நேற்றிலிருந்து “சமந்தா கர்ப்பமாக இருக்கிறார்” என்ற செய்தி பரவி வந்தது. இதை பார்த்த ரசிகர்கள் என்னமாே, ஏதோ என ஓடி வந்து பார்த்தனர். கடைசியில்தான் அது நடிகை சமந்தா அல்ல வேறு ஒரு சமந்தா என்பது அனைவருக்கும் தெரிந்தது. 


நாகார்ஜுனாவின் குடும்பத்தில் புதிதாக இணைய இருப்பவர் சோபிதா. இவருக்கு, சமந்தா என்கிற தங்கை இருக்கிறார். இவருக்கு, ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இவரது கணவரின் பெயர் சாஹில் குப்தா. இவர்கள் இருவரும் டெல்லியில் மருத்துவர்களாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. தற்போது, இவர் கர்ப்பமாக இருக்கிறாராம். இவரது வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்ததாகவும், இதில் சோபிதா கலந்து கொண்டு மகிழ்வுடன் அனைவரையும் வரவேற்றதாகவும் கூறப்படுகிறது.  சோபிதாவின் தங்கை சமந்தா கர்ப்பமாக இருக்கும் செய்தி, நாகார்ஜுனாவின் குடும்பத்தினரை மகிழ்ச்சி பெற செய்திருப்பதாக திரை வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர். 


மேலும் படிக்க | சமந்தாவின் ரிப்போர்ட் கார்ட்! ரொம்ப படிக்கிற பொண்ணு போல..வைரல் போட்டோ!


சமந்தா-நாக சைதன்யா சர்ச்சை:


சில நாட்களுக்கு முன்னர் தெலங்கானா அமைச்சர் சுரேகா, சமந்தா மற்றும் நாகார்ஜுனாவின் குடும்பத்தினர் குறித்து பேசிய சில விஷயங்கள் சர்ச்சையாக மாறியது. முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவ்-ஆல்தான் சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிந்ததாக சுரேகா கூறியிருந்தார். இதற்கு நாகார்ஜுனா, சமந்தா, நானி, ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் கண்டம் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த அமைச்சர் தான் கூறியதை திரும்ப பெறுவதாக பதிவிட்டு, மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். 


திரையுலகில் எட்டி பார்ப்பாரா? 


நடிகை சமந்தா, கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு முன்பு தான் சினிமாவில் நடிப்பதில் இருந்து சிறிது பிரேக் எடுப்பதாக கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு, வேறு எந்த படத்திலும் இவர் கமிட் ஆகவே இல்லை. முன்னர் நடித்திருந்த சிட்டெல் தொடரின் ப்ரமோஷன்களில் தற்போது கலந்து கொண்டு வருகிறார். 


தளபதி 69 படத்திலேயே சமந்தாவை கதாநாயகியாக கொண்டு வருவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் பூஜா ஹேக்டே இப்போது கதாநாயாகியாக நடிக்கிறார். சமந்தா, மீண்டும் எப்போது நடிக்க வருவார் என ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். 


மேலும் படிக்க | வெயிட் லாஸ் செய்ய சமந்தா இரவில் ‘இதை’ குடிப்பாராம்! என்ன தெரியுமா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ