வெளிநாட்டு பெண்ணை கரம் பிடித்த சமந்தாவின் அண்ணன்! வைரல் போட்டோஸ் ..

Actress Samantha At Her Brother Wedding : தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தனது அண்ணனின் திருமண கொண்டாட்டத்தில் சமீபத்தில் கலந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Actress Samantha At Her Brother Wedding : தமிழில் மட்டுமன்றி, தென்னிந்திய அளவில் பெரிய நடிகையாக வலம் வருபவர், நடிகை சமந்தா. கடந்த சில மாதங்களாக, மனதளவிலும்-உடல் அளவிலும் ரெஸ்ட் தேவை என்று கூறிய அவர் தற்போது படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் பிரேக் எடுத்திருக்கிறார். இந்த நிலையில், தனது தனிப்பட்ட பயணங்கள் குறித்தும், தனது சிகிச்சை முறைகள் குறித்தும் அடிக்கடி இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், வெளிநாட்டில் நடைப்பெற்ற தனது அண்ணனின் திருமணத்தில் இவர் கலந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

1 /8

தமிழில், மாஸ்கோவின் காவிரி படம் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு, அவர் தொடர்ந்து பல்வேறு பிரபல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். 

2 /8

தமிழ், இந்தி, தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடித்திருந்தாலும் சமந்தா பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்த பெண் என்பது அனைவருக்கும் தெரியும். 

3 /8

சமந்தா, கடந்த சில ஆண்டுகளகாவே தனது வாழ்வில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறார். முதலில் அவர் ஆயிரம் கனவுகளுடன் நுழைந்த திருமண வாழ்க்கை முடிந்து போனது. இதையடுத்து, தசை பிடிப்பு நோயான ‘மயோசிடிஸ்’ பாதிப்பால் சிரமப்பட்டார். 

4 /8

சில மாதங்களுக்கு முன்பு தான் திரையுலகில் இருந்து பிரேக் எடுக்கபோவதாக அறிவித்த அவர், வெளிநாடுகளுக்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து பயணம் மேற்கொண்டார். 

5 /8

சமந்தா, அடுத்து திரையுலகிற்குள் எண்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த சமயத்தில்தான், தனது அண்ணனின் திருமண விழாவில் இவர் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

6 /8

சமந்தாவிற்கு ஜானதன் மற்றும் டேவிட் என இரு சகோதரர்கள் இருக்கின்றனர். இதில், டேவிட்டிற்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. 

7 /8

அமெரிக்காவின் விஸ்கான்சின் எனும் பகுதியில் வசிக்கும் டேவிட், அந்த நாட்டை சேர்ந்த பெண்ணான நிக்கோல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

8 /8

இந்த திருமண விழாவில், சமந்தா மணப்பெண்ணாக கலந்து கொண்டார். இந்த போட்டோக்களுக்கு நெட்டிசன்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.