7 ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் நடிகை தமன்னா! பெற்றோர்கள் கடும் கண்டனம்..
Tamannaah Bhatia In School Book : நடிகை தமன்னா குறித்து, பள்ளி பாடப்புத்தகத்தில் பாடங்கள் இடம் பெற்றுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை இங்கு பார்ப்போம்.
Tamannaah Bhatia In School Book : தமிழ் திரையுலகை தாண்டி, இந்திய அளவில் பெரிய நடிகையாக இருப்பவர், தமன்னா. வட இந்தியாவை சேர்ந்த நடிகையாக இருந்தாலும், தனக்கு எந்த மொழியில் பட வாய்ப்புகள் வந்தாலும் அதில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். இவர் சமீபத்தில், தமிழில் அரண்மனை படத்தின் 4ஆம் பாகத்தில் நடித்திருந்தார்.
மும்மொழி நாயகி தமன்னா..!
நடிகை தமன்னா, தனது 20களிலேயே திரையுலகிற்குள் நுழைந்து விட்டார். இந்தியில் அறிமுகமான இவர், தமிழில் கேடி படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு இண்ட்ரோ ஆனார். தொடர்ந்து, வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து, பரத், விஷால், தனுஷ், சூர்யா, கார்த்தி, விஜய் உள்ளிட்டோருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.
தமன்னா, பாலிவுட் நாயகியாக இருந்தாலும் ஆரம்பத்தில் அவருக்கு இந்தியில் பட வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. இதனால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக இவருக்கு பாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
பாட புத்தகத்தில் தமன்னா:
பெங்களூருவில் இருக்கும் ஹெப்பால் என்ற பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், 7 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் தமன்னா குறித்த தகவல் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது.
‘சிந்த்’ பிரிவைனைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை’ என்ற பகுதியில், தமன்னாவை பற்றியை குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இது, தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
பெற்றோர்கள் கண்டனம்:
தமன்னாவை தன் குழந்தையின் பாடப்புத்தகத்தில் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பள்ளி குழந்தைகள் ஏன் நடிகை தமன்னா குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
தமன்னாவின் குடும்பம் சிந்த்-பாக்கிஸ்தான் மற்றும் இந்தியா பிளவின் போது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு குடியேறியவர்களின் வழியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. சிந்த் பிரிவினை, இந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதனால்தான், 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமன்னா குறித்த தகவல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போது, தமன்னா பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் விவகாரம் பெற்றோர்கள் மட்டுமன்றி, இணையதளத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க | Tamannaah Salary : தாறுமாறாக சம்பளத்தை உயர்த்திய தமன்னா! எத்தனை கோடி தெரியுமா?
தமன்னாவின் சமீபத்திய படங்கள்..
நடிகை தமன்னா, தமிழில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடித்த படம், ஜெயிலர். இந்த படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்த அவர் தொடர்ந்து இந்தியில் லஸ்ட் ஸ்டோரீஸ், மலையாளத்தில் பாந்தரா, தெலுங்கில் பாேலா ஷங்கர் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் அரண்மனை 4 திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் இவர் அந்தரத்தில் பறந்துகொண்டே நடிக்கும் காட்சியில் நடித்திருந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
காதல்…?
நடிகை தமன்னா, பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருவதாகவும், விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வேதா, ஸ்ட்ரீ 2, ஓதெல்லா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் படிக்க | தமன்னாவிற்கு போலீஸ் சம்மன்! நடந்தது என்ன? முழு விவரம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ