Amaran Movie Success Meet : 2014ஆம் ஆண்டு இந்தியாவையே உலுக்கிய புல்வாமா தாக்குதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம், அமரன். மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்னேசனல்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெற்றி விழா:


அமரன் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. 


ராஜ்குமார் பெரியசாமி பேசுகையில்,


“மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது குடும்பத்தாருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அமரன் உண்மை கதையை மையமாக கொண்ட திரைப்படம். சினிமாவில் இது ஒரு ஜானர். அந்த வகையில் இந்த திரைப்படம் மக்களை சென்றடைந்து இப்படி ஒரு வெற்றி நிகழ்வுக்கு வந்திருக்கிறது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதை தாண்டி நெகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றி மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது. அடுத்தடுத்து புது முயற்சிகளை முன்னெடுக்க தோன்றுகிறது” என்று கூறினார். 


தொடர்ந்து பேசிய அவர், “இந்தக் கதையை திரைப்படமாக எடுக்க மேஜர் முகுந்து வரதராஜனின் குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போது, முகுந்த் வரதராஜனின் மனைவி எனக்கு ஒரு கோரிக்கை வைத்தார். முகுந்த் தன்னை ஒரு தமிழன் என்று பெருமை கொள்வார். இந்தத் திரைப்படத்தில் முகுந்த் ஒரு தமிழனாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் அந்த வகையில் சிவகார்த்திகேயன் தமிழன். அவர் இந்த திரைப்படத்தில் நடித்துக் கொடுத்ததற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார். 


சாதியக்குறியீடு இல்லாத பிரச்சனை..


மேஜர் முகுந்த் வரதராஜன், குறிப்பிட்ட உயர் சாதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. ஆனால், அமரன் படத்தில் அப்படிப்பட்ட குறியீடுகள் எதுவுமே இல்லை. அவர் தனது தந்தையை அப்படத்தில் “நைனா” என்று அழைப்பது போல காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதை பார்த்த அந்த குறிப்பிட்ட உயர் சாதியை சேர்ந்தவர்கள், முகுந்தின் சாதியை காண்பிக்காதது ஏன்? என்று கேட்டு வந்தனர். இது ஒரு சர்ச்சையாகவே உருவெடுத்தது. இதற்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நச் பதில் ஒன்றை கொடுத்திருக்கிறார். 


 “அவரது தாய் தந்தையர் முகுந்த் வரதராஜன் தன்னை ஒரு இந்தியனாக மட்டுமே அடையாள படுத்திக்கொள்ள நினைத்தார் என கூறினார்கள். ஒரு ராணுவ வீரனை நினைவு கூற எடுத்த திரைப்படம். இந்தத் திரைப்படத்திற்காக அவர் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அசோக சக்கர விருது பெற்ற அவர் ஆற்றிய அந்த சிறப்பான பணிக்கும் தியாகத்திற்கும் மரியாதை செலுத்தும் விதமாக அமரன் திரைப்படம் இருக்கும்” என்று கூறினார்.


நடிகை சாய் பல்லவி மேடைப்பேச்சு;


“மற்ற படங்களை பார்த்தால் எல்லோரும் நல்லா இருக்கிறது என்று தான் சொல்வார்கள் இந்த படத்தைப் பார்த்து என்னை எல்லோரும் கட்டி அணைத்தார்கள் அதுவே மிகப்பெரிய வெற்றி இந்த படத்தில் நான் ஒரு கதாபாத்திரம் நடித்திருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியோடு பார்க்கிறேன் அது ஒரு ஆசிர்வாதம்” என்றார். 


நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில்


“இந்த கதையை முதன் முதலில் கேட்கும்போது அமரன் திரைப்படம் ஒரு வெற்றி படமாக அமையும் என்று எனக்கு நன்றாக தெரியும். கமல் சார் எப்போது ஊருக்கு வந்து கட்டி அணைத்து என்னை பாராட்டுவார் என்ற தருணத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன்.  கமல் சார் தொலைபேசி மூலமாக என்னிடம் பேசும்போது,  திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்று அனைவரிடம் கூறுங்கள் என்று கூறினார். 


தொடர்ந்து பேசிய அவர், “ராஜ்குமார் பெரியசாமி பேய் மாதிரி வேலை பார்ப்பார், தூங்கவே மாட்டார். அவர் சரியாக தூங்கி மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிறது என நினைக்கிறேன். எனக்கு ரெக்கார்ட் பிரேக்கிங் திரைப்படங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை எனக்கு இந்த படம் நடிப்பதை பெரும் பாக்கியமாக சந்தோஷமாக உணர்கிறேன்.


பியார் பிரேமம் திரைப்படத்தில் வரும் மலர் டீச்சரை போல தமிழில் அமரன் திரைப்படம் சாய் பல்லவிக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தரும் என நினைக்கிறேன். சாய் பல்லவிவுடன் நான் பணியாற்றியது மிகவும் சந்தோஷம்.” என்று கூறினார். 


“முகுந்த் வரதராஜன் குடும்பத்திற்கு ரொம்ப நன்றி, இந்த படம் எடுக்க அவர்கள் வாய்ப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி” என்று கூறினார். 


மேலும் படிக்க | உண்மையான இந்து ரெபேக்கா வர்கீஸ் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?


“அப்பாவுடன் முகுந்திற்கு இருக்கும் ஒற்றுமை..”


தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன், “முகுந்த் சாருக்கும் அப்பாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கு. அப்பா இந்த மாதிரி ஊருக்கு வரேன்னு சொன்னாரு. அடுத்த நாள் நான் காலேஜ் போய்ட்டு வரும்போது வீட்டுல கூட்டமா இருந்துச்சு. அப்பா இறந்திட்டார்னு தெரிஞ்சது. சடங்கு முடிக்கும்போது என்னுடைய அப்பாவோட எலும்பை பார்த்தேன். அங்க உடைஞ்சது அப்பாவோட எலும்பு மட்டும் இல்ல 17 வயசு பையனான என்னுடைய மனசும்தான். 


இந்த படத்தோட க்ளைமேக்ஸ் மாதிரி ஜனாதிபதிகிட்ட எங்க அம்மா மெடல் வாங்கினாங்க. இந்த படத்தின் மூலமாக என்னுடைய அப்பாவை நான் பார்த்துட்டேன். முகுந்த் வரதராஜன் வாழ்க்கைக்கும், என் அப்பாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. என் அப்பாவை மீண்டும் பார்ப்பதற்கான வாய்ப்பை அமரன் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது" 


“கடந்த 21  வருடங்களாக எனது அப்பாவின் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். காவல்துறை சீருடை அணிந்து ஹீரோ மாதிரி இருப்பார் அவர் தான் என்னுடைய முதல் ஹீரோ. நான் எனது அப்பா  போல் இந்த படத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தது தான் அதிகம்” என்று கூறினார். 


மேலும் படிக்க | இந்து ரெபேக்கா வர்கீஸிடம் மறுமணம் குறித்து பேசிய மாமனார்..அவர் சொன்ன பதில் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ