‘பாரதி கண்ணம்மா’ தொடர் நடிகைக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
Latest News Serial Actress Kanmani Manoharan : பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான ஒரு நடிகை, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Latest News Serial Actress Kanmani Manoharan : பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான ஒரு நடிகை, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அவர் யார் தெரியுமா?
தமிழ் திரையுலகிற்கு இது கல்யாண சீசன். கடந்த சில மாதங்களாகவே திரைத்துறை சேர்ந்த பல்வேறு நபர்கள் காதலித்து திருமணம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டில் இந்திய திரை உலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் திருமணம் முடித்திருக்கின்றனர். ஐஸ்வர்யா-உமாபதி, பாலிவுட்டில் சோனாக்ஷி சின்கா, இப்போது வரலட்சுமி சரத்குமார் ஆகியோரின் வரிசையில் புதிதாக இன்னொரு சின்னத்திரை நடிகைகளின் இணைந்திருக்கிறார்.
கண்மணி மனோகரன்:
தமிழ் தொலைக்காட்சி தொடர் நடிகைகளில் பிரபலமான ஒருவராக வலம் வருபவர் கண்மணி மனோகரன். இவர் தளபதி நடிகரின் பெயர் கொண்ட தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா என்னும் தொடரில் நடித்திருந்தார். இதில் நாயகி கண்ணம்மாவில் அழகான தங்கையாக நடித்திருந்த இவர், வில்லியாக தோன்றினார். பின்னர் இவரது கதாபாத்திரம் திருந்தியது போல காண்பிக்கப்பட்டு இருந்தாலும் ரசிகர்களால் இந்த மாற்றத்தை பெரிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த கதாபாத்திரத்தின் பெயர் அஞ்சலி. இந்த சீரியல் முடிவு பெற்றது தொடர்ந்து, அவருக்கு வேறு ஒரு தொலைக்காட்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அமுதவும் அன்னலட்சுமியும் தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு பிறகு ஏற்கனவே பிரபலமாக இருந்தது இவர் இன்னும் பிரபலமானார். இதுவரை instagramல் அதிகம் பேர் ஃபாலோ செய்யும் தமிழ் சீரியல் நடிகைகளில் டாப்பில் இருக்கிறார் கண்மணி மனோகரன். இவருக்கு தற்போது 29 வயது ஆகிறது.
மேலும் படிக்க | காதலியை கரம் பிடித்த ‘பாரதி கண்ணம்மா’ தொடர் நடிகர்...!
திருமண நிச்சயதார்த்தம்:
சூரியனின் ஆங்கில பெயர் கொண்ட தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர் அஸ்வத். தொகுப்பாளராக மட்டுமின்றி மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரமாகவும் நடித்து வருகிறார். இவருக்கும் கண்மணி மனோகரனுக்கும் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
யாரும் எதிர்பார்க்கவில்லை!
திரையுலகை சேர்ந்தவர்கள் ஒன்றாக ஏதேனும் இடத்தில் வேலை பார்த்திருப்பர், அதன் பிறகு தான் காதல் மலர்ந்திருக்கும். அப்படியே நிச்சயதார்த்தம்-திருமணம் ஆகியவை நடைபெறும். ஆனால் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வேலை பார்த்ததில்லை என்று கூறப்படுகிறது. இவர்களை எங்குமே ஒன்றாய் பார்க்காத ரசிகர்களுக்கு இவர்களின் திருமண அறிவிப்பு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருமணம் செய்து கொள்ள இருக்கும் இவர்களை ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் ஆகியோர் வாழ்த்தி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ