ஐஸ்வர்யா அர்ஜுன்-உமாபதி ராமையாவின் காதல் கதை ஆரம்பித்தது எப்படி?

Aishwarya Arjun-Umapathy Ramaiah Love Story: அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் உமாபதி ராமையாவிற்கும் சமீபத்தில் நிச்சதார்த்தம் நடந்தது. 

1 /7

அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும், தமிழ் குணச்சித்திர நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் சமீபத்தில் நிச்சதார்த்தம் நடந்தது. 

2 /7

ஐஸ்வர்யா, பட்டத்து யானை படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இதையடுத்து அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. 

3 /7

தம்பி ராமையாவின் மகன், உமாபதி ராமையா திருமணம், மணியார் குடும்பம், தண்ணி வண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 

4 /7

உமாபதி, ‘சர்வைவர்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கியிருந்தார். 

5 /7

‘சர்வைவர்’ நிகழ்ச்சிக்கு பிறகு அர்ஜுன் மற்றும் உமாபதி இடையே நல்ல நட்பு நிலவியதாக கூறப்படுகிறது. 

6 /7

நண்பர்களாக மாறிய இவர்கள், விரைவிலேயே குடும்ப நண்பர்களாக மாறினார்களாம். இதையடுத்து இருவரும் குடும்பங்களாகவும் சந்தித்து கொண்டதாகவும் அப்போது ஐஸ்வர்யா-உமாபதி சந்தித்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், இருவரும் பழக ஆரம்பித்ததாக சினிமா வட்டாரங்களில் இருந்து சில தகவல்கள் கசிந்துள்ளது.

7 /7

உமாபதி-ஐஸ்வர்யாவின் காதலுக்கு இருவரது குடும்பத்தினர் கிரீன் சிக்னல் கொடுத்தவுடன் தற்போது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.