Bigg Boss 8 Tamil Wild Card Contestants List : தற்போது பரபரப்பாக நடைப்பெற்று வரும் நிகழ்ச்சி, பிக்பாஸ் 8. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வர இருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா? தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்ற ஷோவாக இருக்கிறது, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் 8:


தமிழில் ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சியை, 7வது சீசன் வரை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். 8வது சீசன் முதல் புதிய ஹோஸ்டாக வந்தவர், நடிகர் விஜய் சேதுபதி. இந்த சீசனில், முக்கிய போட்டியாளர்களாக 18 பேர் பங்கேற்றனர். ஆரம்பத்தில் இருந்து இந்த நிகழ்ச்சி, கொஞ்சம் தாெய்வாக போய்க்கொண்டிருக்கிறது. 


3 வாரங்கள் தற்போது இந்த நிகழ்ச்சியில் கடந்திருக்கும் நிலையில், முக்கிய போட்டியாளர்களாக வருவார்கள் என எதிர்பார்த்தவர்கள் எவிக்ட் ஆக ஆரம்பித்து விட்டனர். 3வது வார எபிசோடில் விஜய் சேதுபதி இன்னொரு முக்கிய போட்டியாளரை எவிக்ட் செய்திருக்கிறார். இதனால், வீட்டில் ஆட்கள் குறைய தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில், இதில் விரைவில் நுழைய இருக்கும் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 


வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்..


பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி சில நாட்களில் புதிதாக போட்டியாளர்கள் உள்நுழைவர். அவர்களில் பெரும்பாலானவர்கள், பிரபலமானவர்களாக இருப்பர். அந்த வகையில், இந்த சீசனிலும் சில பிரபலங்கள் இல்லத்திற்குள் நுழைய இருக்கின்றனர். அவர்கள் யார் யார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.


மாயாவின் சகோதரி:


போன பிக்பாஸ் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்தவர், மாயா கிருஷ்ணன். இவரது சகோதரி, ஸ்வாகதா போன பிக்பாஸ் சீசனின் பாேதே கெஸ்டாக இல்லத்திற்குள் நுழைந்தார். இவர், இந்த சீசன் பிக்பாஸில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 


திவ்யா:


பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த அர்னவ், சில நாட்களுக்கு முன்னர் வெளியேறினார். இவரது முன்னாள் மனைவியும் சீரியல் நடிகையுமான திவ்யா இந்த சீசன் பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்குள் போட்டியாளராக நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 


மேலும் படிக்க | “பிக்பாஸ் 8 டைட்டில் வின்னராக ‘இவருக்கு’ வாய்ப்பு இருக்கு..” எவிக்ட் ஆன ரவீந்திர் பேட்டி!



டிஎஸ்கே:


நடிகரும் சின்னத்திரை பிரபலமுமான டிஎஸ்கே, பிக்பாஸ்  8 நிகழ்ச்சிக்குள் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைய இருக்கிறாராம். இவர், லப்பர் பந்து உட்பட பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றார். நல்ல என்டெர்டெயினராக இருக்கும் இவர், கண்டிப்பாக பிக்பாஸிற்குள் நுழைந்தால், ஒரு கலக்கு கலக்குவார் என கூறப்படுகிறது. 


ஷாவ்லின் ஜோயா:


குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர், ஷாவ்லின் சோயா. டிடிஎஃப் வாசனின் காதலியான இவர், தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற போட்டியாளராக இருக்கிறார். இவர், சில படங்களில் துணை கதாப்பாத்திரங்களிலும், சில படங்களில் துணை இயக்குநராகவும் வேலை பார்த்திருக்கிறார். இவரும் பிக்பாஸிற்குள் நுழைய இருக்கிறாராம். 


ஐஸ்வர்யா:


தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமானவர், ஐஸ்வர்யா பாஸ்கரன். சில பிரபலமான தமிழ் சின்னத்திரை தொடர்களிலும் அவர் நடித்திருக்கிறார். இவரும், பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 


மேலும் படிக்க | பிக்பாஸ் 8 சாச்சனா குறித்து அதிர்ச்சி தகவல் கூறிய சிவகார்த்திகேயன்! என்ன சொன்னார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ