Pradeep Anthony Engagement : கடந்த ஆண்டு பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிரதீப் ஆண்டனி. இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதீப் ஆண்டனிக்கு திருமணம்:


பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், ரெட் கார்டு வாங்கி வெளியேறியவர் பிரதீப் ஆண்டனி. இவர் ஒரு பதிவினை தற்போது வெளியிட்டிருக்கிறார். அதில், தனக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். தனக்கெல்லாம் இது நடக்காது என்று நினைத்ததாகவும் என்னை நம்பியும் பெண் தருகிறார்கள் என்றும் அந்த பதிவில் அவர் ஹேஷ்டேக்குகளில் சேர்த்திருக்கிறார். கூடவே, இது 90ஸ் கிட்ஸின் சாதனை என்றும் கூறியிருக்கிறார்.  



இவர், தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பெண்ணைதான் திருமணம் செய்து கொள்ளப்போகிறார். இதையடுத்து ரசிகர்கள் அனைவரும் புது ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


பிக்பாஸ்..ரெட் கார்டு விவகாரம்!


நடிகர் பிரதீப் ஆண்டனி, அருவி படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். எய்ட்ஸ் நோயாளி பெண்ணை காதலிப்பது போன்ற கதாப்பாத்திரத்தில் அப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து, கவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டாடா படத்திலும் அவருக்கு நண்பனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை அடுத்து கொஞ்சம் பிரபலமான இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது.


இந்த நிகழ்ச்சியில், ஆரம்பத்திலிருந்தே பலரை ஈர்க்கும் வகையில் இருந்த போட்டியாளர்களுள் ஒருவராக இருந்தார் பிரதீப். ஆனால், நாட்கள் செல்ல செல்ல ஹவுஸ் மேட்ஸிற்கு இவரின் பிடிக்காமல் போனது. ஒரு கட்டத்தில் இவர் செய்த செயலால் கடுப்பான பிற போட்டியாளர்கள், இவர் மீது ‘உரிமை குரல்’ உயர்த்தினர். தனித்தனியே அனைத்து ஹவுஸ் மேட்ஸ்களுடனும் உரையாடல் நடத்திய கமல்ஹாசன், இவருக்கு ரெட் கார்டு கொடுக்கலாமா வேண்டாமா என்று கேட்டார். பெரும்பாலானோர் ரெட் கார்டு காண்பிக்க, அந்த எபிசோடின் இறுதியில், பிக்பாஸ் இல்லத்தில் இருந்து ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் பிரதீப். 


மேலும் படிக்க | பிக்பாஸ் 7 பிரதீப் ஆண்டனியின் காதலி இவர்தான்..! வைரலாகும் போட்டோ..!


பெரும் சர்ச்சை..


பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட விவகாரம் போட்டியாளர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு காரணமாக இருந்த ஜோவிகா, பூர்ணிமா, மாயா, நிக்ஸன் ஆகியோர் மீது பிக்பாஸ் போட்டியின் ரசிகர்களுக்கு பெரும் வெறுப்பு எழுந்தது. அது மட்டுமன்றி, இந்த விவகாரத்தில் சக போட்டியாளர்களான விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் ஆகியோரிடமிருந்தும் இவர்கள் எதிர்ப்புகளை சம்பாதித்தனர். இந்த போட்டியிலிருந்து 37 நாட்களுக்குள்ளாகவே பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டிருந்தாலும், 100வது நாள் வரை பேசு பொருளாக இருந்தார். இவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டாம் என தெரிவித்த அர்ச்சனாவிற்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டம் கொடுக்கப்பட்டது. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு வைல்டு கார்டு போட்டியாளருக்கு பட்டம் வழங்கப்பட்டு, ஒருவருக்கு ரெட் கார்டும் வழங்கப்பட்டது. 


பிரதீப் ஆண்டனி, பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகு அவருக்கு சில பட வாய்ப்புகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் வெளியேற்றப்பட்ட போது, நடிகரும் பிரதீப்பின் நண்பருமான கவின், தன் தோழனுக்கு உறுதுணையாக நின்றது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | பிக்பாஸ் 7: பிரதீப் ஆண்டனி மொத்தமாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ