Latest News H Vinoth Confirms Thalapathy 69 : தமிழ் திரையுலகில் கவனம் ஈர்க்கும் நடிகராக வளம் வருபவர், ஹெச்.வினோத். இவர், அடுத்து நடிகர் விஜய்யை வைத்து அவரது 69வது படத்தை இயக்க இருக்கிறார். இந்த நிலையில், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமாக, சமீபத்தில் ஒரு விழா மேடையில் பேசினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹெச்.வினோத் இயக்கத்தில் தளபதி 69:


ஹெச்.வினோத், முதன் முதலில் இயக்கிய படம், சதுரங்க வேட்டை. நட்ராஜன்-நட்டி நடிப்பில் தனித்துவமான கதையம்சத்துடன் வெளியான இப்படம், மக்கள் பலரை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தை அடுத்து அவர் கார்த்தியை வைத்து தீரன்-அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். இப்படமும் நல்ல வெற்றியை பெற, தொடர்ந்து பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்க தொடங்கினார். 


தொடர்ந்து அஜித்தை வைத்து, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கினார். இவை பெரும்பான்மையான மக்கள் மத்தியில் நெகடிவ் விமர்சனங்களை பெற்றாலும், நல்ல வசூலையும் ஈட்டியது. இந்த சமயத்தில், அவர் தற்போது கமிட் ஆகியிருக்கும் படம்தான், தளபதி 69.


அரசியலில், முழு நேரமாக ஈடுபடப்போவதாக கூறியிருக்கும் தளபதி விஜய், கடைசியாக நடிக்க இருக்கும் படம்தான், தளபதி 69. வெங்கட் பிரபு இயக்கத்தில், GOAT படத்தில் நடித்திருக்கும் அவர் அடுத்து ஹெச்.வினோத்தின் படத்தில் நடிக்க இருக்கிறார். 


அடுத்த ஹீரோ யார்..? 


நடிகர் விஜய்யை வைத்து, தளபதி 69 படத்தை முடித்தவுடன் ஹெச்.வினோத், அடுத்து ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்குவேன் என்று கூறியிருக்கிறார். இது குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் முன்கூட்டியே பேசியிருப்பதாகவும், அவர் மீண்டும் தன்னை அழைத்தால் கண்டிப்பாக அவருடன் சேர்ந்து பணிபுரிய தயார் என்றும் கூறியிருக்கிறார். 



மேலும் படிக்க | விஜய், சமந்தாவை உள்பட தளபதி 69-ல் இணைந்திருக்கும் பிரபலங்கள் யார்? லிஸ்ட் இதோ!


அரசியல் படமா? 


தளபதி 69 திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியான பாேது, இது அரசியல் த்ரில்லர் படமடாக இருக்கும் என்பது பலரது கருத்தாக இருந்தது. ஏனென்றால், அரசியலில் நுழைவதற்கு முன்பு இது அவரது கடைசி படமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து பேசிய ஹெச்.வினோத் பேசுகையில், இந்த படத்தை அனைத்து தரப்பினரும் பார்ப்பர் என்றும், அதனால் இது கண்டிப்பாக அரசியல் படமாக இல்லாமல் நல்ல கமர்ஷியல் படமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். 


டிராப் ஆகும் நிலைமை…


தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்னும் படக்குழு தரப்பில் இருந்தும், தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து வெளியாகவில்லை. முன்னரும் இதே நிலைதான். சில நாட்களுக்கு முன்பு, இப்படம் டிராப் ஆவதாக கூறப்பட்டது. விஜய், வேறு சில கமிட்மன்ட்களில் இருப்பதாகவும், இதனால் இப்படத்தில் தொடர முடியாது என்றும் கூறப்பட்டது. இதையடுத்து, இந்த தகவல்கள் வெறும் வதந்திகள்தான் என்று ஹெச்.வினோத் பேசியதற்கு பிறகு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


நாயகி யார்? 


தளபதி 69 படத்தின் நாயகி யார் என்பது தற்போது மக்களிடையே பெரிய கேள்வியாக இருக்கிறது. நடிகை சமந்தா, இதற்கான லுக் டெஸ்டிங்கில் ஈடுபட்டதாகவும் பின்னர் இவர் கதாநாயகியாக உறுதிப்படுத்த பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே சமயத்தில், மலையாள நடிகை மமிதா பைஜுவும் இதில் இரண்டாவது ஹீரோயினாக நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது தமிழ் ரசிகர்கள் அதிகம் பேரை கொண்டுள்ள நாயகியாக வலம் வரும் இவர், இந்த படத்திலும் இடம் பிடித்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  


மேலும் படிக்க | தளபதி 69 படத்தின் கதை இதுதான்! கசிந்தது தகவல்..அதிர்ச்சியில் படக்குழு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ