“#நன்றி கெட்ட ரஞ்சித்” இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! என்ன விஷயம்?
Director Pa Ranjith Recent Interview : இயக்குநர் பா.ரஞ்சித்தை குறிவைத்து, இணையத்தில் ‘நன்றி கெட்ட ரஞ்சித்’ என்ற பெயரில் ஹேஷ்டேக் ஒன்று வைரலாகி வருகிறது.
Director Pa Ranjith Recent Interview : தமிழ் திரையுலகில் புரட்சிமிகு இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர், இயக்குநர் பா.ரஞ்சித். சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரான படங்களை எடுத்து பிரபலமான இவர், அதே காரணத்திற்காக சில சமயங்களில் இணையத்தில் ட்ரோல் செய்யப்படுவதும் உண்டு. தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் இவர் நடந்து கொண்ட விதம் இணையத்தில் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. அது என்ன வீடியோ? ரஞ்சித்தை ரசிகர்கள் இவ்வளவு கடுமையாக தாக்குவதற்கு காரணம் என்ன? இங்கு பார்க்கலாம்.
ரஜினியுடன் இரண்டு படங்கள்..
பெரிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்கள் மூலமாக மட்டும் ஹிட் படங்களை கொடுத்து வந்த நடிகர் ரஜினிகாந்த், சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கதை தேர்ந்தெடுக்கும் தொனியை மாற்றினார். அதற்கு அடித்தளமாக அமைந்தவர், இயக்குநர் பா.ரஞ்சித்.
2016ஆம் ஆண்டு வெளியான ‘கபாலி’ படத்தில் ரஜினியை ஹீரோவாக நடிக்க வைத்திருந்த அவர், இப்படத்தை தலித் சமூகத்திற்கு ஆதரவாக எடுத்திருந்தார். அதே போல ரஜினியை வைத்து அவர் இயக்கிய அடுத்த படம், ‘காலா’. 2018ஆம் ஆண்டு வெளியான இப்படம், நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தாலும், மக்களிடையே சரியான வரவேற்பினை பெறவில்லை.
காலா படமும் தலித் சமூகத்தினருக்கு ஆதராவகத்தான் எடுக்கப்பட்டிருந்தது. இவ்விரண்டு படங்களும் பா.ரஞ்சித்திற்கு பெரிய மார்கெட்டை தேடி கொடுக்க, அப்படி “நீலம் ப்ரொடக்ஷன்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்து விட்டார், ரஞ்சித்.
விமர்சனங்களுக்குள்ளான பா.ரஞ்சித்:
பா.ரஞ்சித், சமீபத்தில் ஒரு மேடை நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மலையாள இயக்குநர் பிஜூ, தமிழ் சினிமாவை போல மலையாள திரையுலகில் தலித் சமகத்தினருக்கான படங்கள் பெரிதாக இல்லை என்று கூறினார். மேலும், ரஜினிகாந்த் ரஞ்சித்தின் இரு படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு தலித் அரசியல் புரிந்ததா இல்லையா என்பது தெரியவில்லை என்று கூறினார். இதை கேட்டவுடன் நேர்காணில் அமர்ந்திருந்த ஆடியன்ஸ் சிரிக்க, பா.ரஞ்சித்தும் நக்கலாக சிரித்தார். இது, ரஜினிகாந்த் மட்டுமன்றி தமிழக ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க | ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான்! வெளியானது டைட்டில்
ஆன்மீக அரசியல் vs தலித் அரசியல்…
சில வருடங்களுக்கு முன்னர் தான் அரசியலுக்கு வருவதாக கூறியிருந்த நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் வழி, ஆன்மிக அரசியலாக இருக்கும் என்று கூறினார். ஆனால் அவர் நடித்திருந்த காலா-கபாலி ஆகிய இரண்டு படங்களுமே அதற்கு நேர் எதிரானவை. இதனால்தான், மலையாள இயக்குநர் பிஜு, அப்படியொரு கேள்வியை ரஞ்சித்திடம் கேட்டிருக்கிறார். அதற்கு ர்சித் சிரித்ததுதான் தற்போது இணையத்தில் பெரிய சர்ச்சையாகி இருக்கிறது.
“#நன்றி_கெட்ட_ரஞ்சித்”:
ரஞ்சித்தின் தற்போதைய நேர்காணலின் வீடியோ தற்போது நெட்டிசன்களின் கைகளில் சிக்கியுள்ளது. இதற்கு முன்னர் ரஞ்சித்தின் படங்களுக்கும், அவருக்கும் ஆதரவு தெரிவித்து வந்தவர்கள் கூட தற்போது அவரை விமர்சித்து வருகின்றனர். இதனால் இணையத்தில் “நன்றி கெட்ட ரஞ்சித்” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த், கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக திரையுலகில் இருக்கிறார். இவ்வளவு அனுபவம் மிக்கவருக்கு, தலித் அரசியல் தெரியவில்லை என்று ஒருவர் கூறியதற்கு பா.ரஞ்சித் சிரித்தது ரசிகர்களை கோபத்தில் கொந்தளிக்க வைத்துள்ளது. ரஞ்சித்தால்தான் ரஜினிகாந்தின் மார்கெட் சரிந்தது என்றும், ஆனால் இப்போது கொஞ்சம் கூட விசுவாசமே இல்லாமல் அவர் இப்படி நடந்து கொண்ட விதம் சரியில்லை என்றும் நெட்டிசன்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ