மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்!! என்ன விஷயம் தெரியுமா?
Latest News Youtuber Irfan Controversy : பிரபல யூடியூபர் இர்ஃபான், சில மாதங்களுக்கு முன்பு தனக்கு என்ன குழந்தை பிறக்க இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு வீடியோ வெளியிட்டது வைரலான நிலையில், தற்போது இன்னொரு பிரச்சனையில் சிக்கியிருக்கிறார்.
Latest News Youtuber Irfan Controversy : தமிழில் பிரபல யூடியூபராக வலம் வருபவர் இர்ஃபான். இவர், யூடியூபில் தனக்கென ஒரு சேனலை வைத்து அதன் மூலம் பல கடைகளுக்கு சென்று, அங்கிருக்கும் விதவிதமான உணவுகளை சாப்பிட்டு ரிவ்யூ செய்து வருகிறார். இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு, தனக்கு என்ன குழந்தை பிறக்க இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட இவர், Gender Reveal என்ற பெயரில் அந்த வீடியோவையும் வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையாக மாறியது. இதையடுத்து, இப்போது இன்னொரு பிரச்சனையில் சிக்கியிருக்கிறார்.
குழந்தையின் தொப்புள் கொடியை கட் செய்து வீடியோ!!
யூடியூபர் இர்ஃபானுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இது குறித்து மகிழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தெரிவித்திருந்தார். இதையடுத்து, மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் வெட்டுவதை இவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டிருக்கிறார். இதனால், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். முன்னர் ஏற்பட்ட பிரச்சனையே பெரும் புயலாக மாறியதை அடுத்து இப்போது மீண்டும் இது போல இன்னொரு சர்ச்சையில் இர்ஃபான் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
யூடியூபர் இர்ஃபானிடம் விளக்கம் கேட்க முடிவு:
தனது மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் வெட்டும் வீடியோவை வெளியிட்ட யூடியூபர் இர்ஃபானிடம் விளக்கம் கேட்க உள்ளதாக ஊரக நலப்பணி இயக்குனர் மருத்துவர்ஜெ.ராஜமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மீது மருத்துவ கவுன்சிலில் புகாரளிக்க உள்ளதாகதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இந்தியாவில்தான் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரே அதன் பாலினத்தை வெளியில் சொல்லக்கூடாது என்ற சட்டம் இருக்கிறது. ஆனால், வெளிநாடுகளில் அப்படியல்ல. இர்ஃபான், தனக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே தன் குழந்தையின் பாலினத்தை எப்படி தெரிந்து கொண்டார் தெரியுமா? தன் மனைவிக்கான பிரசவ சிகிச்சைகளை எல்லாம் துபாயில் பார்த்து வரும் இர்ஃபான், குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்வதற்கும் துபாய்க்குதான் சென்றார். என்ன குழந்தை பிறக்க இருக்கிறது என்பதை தெரிவிக்க வெளிநாடுகளில் Gender Reveal Party என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்துவர். இதே போன்ற நிகழ்ச்சியை இர்ஃபான் நடத்தி, தனக்கு பெண் குழந்தை பிறக்க இருப்பதற்கு குறியீடாக ”பிங்க்” நிற பவுடர்களை தூவி, தெரிவித்தார். இதை வீடியோவாக வெளியிட்டதை அடுத்து இவர் மீது புகார்கள் பரந்தன. இது ஒரு வழியாக சில வாரங்களுக்குள் ஓய்ந்தது.
மேலும் படிக்க | பிரியாணி மேன் செயலால் அதிர்ச்சி! இர்பான் - டெய்லர் அக்காவுடன் என்ன தான் மோதல்?
யார் இந்த இர்ஃபான்?
சென்னையை சேர்ந்த பிரபலமான யூடியூப் கிரியேட்டர்களுள் ஒருவர், இர்ஃபான். இவருக்கு சமூக வலைதளங்களிலும் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சிறு வயதில் இருந்தே தனது அதிக எடை காரணமாக பலரால் ட்ரோல் செய்யப்பட்ட இர்ஃபான், அதையே தனது அடையாளமாக மாற்றி, தாயின் வார்த்தைகளை தூண்டுகோளாக எடுத்துக்கொண்டு அமெரிக்காவிற்கு சென்று படித்திருக்கிறார். ஆரம்பத்தில் படங்களை ரிவ்யூ செய்து வந்த இவர், அது வர்க் அவுட் ஆகாததால் தான் சாப்பிடும் உணவுகளை ரிவ்யூ செய்ய ஆரம்பித்தார். 2 சகீலா பானு என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
மேலும் படிக்க | குக் வித் கோமாளி இர்ஃபானுக்கு புதிய சிக்கல்.. சுகாதாரத்துறை பரபரப்பு நோட்டீஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ