Kanguva Movie Release Problem : கங்குவா திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிக்கப்பட்ட டெடி 2 , தங்கலான் உள்ளிட்ட சில படங்களின் தயாரிப்பு செலவுகளுக்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 99 கோடி கடனாக பெற்றிருந்தார். இதில் 45 கோடி திருப்பி கொடுத்த நிலையில் மீதமுள்ள 55 கோடி இன்னும் கொடுக்காமல் ஒப்பந்த விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக ரிலையன்ஸ் நிறுவனம் சார்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


அந்த மனுவில் பாக்கி தொகையினை கொடுக்காமல் நடிகர் சூர்யா நடித்து வெளியாக உள்ள கங்குவா திரைப்படத்தை வெளியிடக்கூடாது. தங்கலான் திரைப்படத்தை ஓடிடி தளத்திலும் வெளியிடக்கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று இந்த மனு விசாரணைக்கு நடந்த நிலையில் ஸ்டுடியோ கிரீன் கொடுக்க வேண்டிய தொகையில் 18 கோடியை மேங்கோ மாஸ் மீடியா நிறுவனம் செலுத்தி விட்டதால் தங்கலான் படத்தை ஓடிடி யில் வெளியிட ஆட்சேபனை இல்லை என ரிலையன்ஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். 

 

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மீதமுள்ள தொகை நாளைக்குள் திரும்ப செலுத்தப்படும் என உறுதி தெரிவித்தார். பணம் செலுத்தப்பட்டு விட்டதா என்பதை தெரிந்து கொண்டு இந்த வழக்கில் தீர்வு காண மீண்டும் நாளை மதியம் விசாரணையை ஒத்தி வைத்து இருக்கிறார் நீதிபதி. நாளை கொடுக்க வேண்டிய அந்த பாக்கி தொகை திரும்ப கொடுக்கும் பட்சத்தில் கங்குவா திரைப்படம் வெளியாக எந்த சிக்கலும் இருக்காது என சொல்லப்படுகிறது.

 


 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ