அமரன் படத்தை பாராட்டாத தனுஷ்..லக்கி பாஸ்கர் படத்தை பாராட்டினாரா?

Written ByYuvashree
Published: Nov 06, 2024, 11:54 AM IST|Updated: Nov 06, 2024, 11:54 AM IST

Dhanush Reportedly Appreciated Lucky Baskhar Movie : தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் தனுஷ், தீபாவளிக்கு வெளியான லக்கி பாஸ்கர் படத்தை பாராட்டியிருப்பதாக கூறப்படுகிறது. 

Dhanush Reportedly Appreciated Lucky Baskhar Movie : கோலிவுட் உலகின் முன்னணி நடிகராக விளங்குபவர் தனுஷ். நடிகர் சிவகார்த்திகேயனின் திரை வளர்ச்சிக்கு இவர் முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. 3 படத்தில் இவர்கள் ஒன்றாக நடித்திருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது சிவகார்த்திகேயன் டாப் நடிகராக வளர்ந்துவிட்ட நிலையில், இருவரும் பேசிக்கொள்வதில்லை என்றும் பேசப்படுகிறது. இதையடுத்து, தீபாவளிக்கு அமரன் படம் வெளியானது. ஆனால், இந்த படத்தை பாராட்டாமல், அத்துடன் போட்டியாக வெளியான இன்னொரு படத்தை அவர் பாராட்டியிருப்பதாக கூறப்படுகிறது. 

Dhanush SK 1/8

Dhanush SK

சிவகார்த்திகேயன், கடந்த 10 வருடங்களில் சினிமாவில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார். இவரது திரை வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தது, 3, மெரினா மற்றும் எதிர்நீச்சல் படம். சிவகார்த்திகேயன் சினிமாவில் பெரிய நிலைக்கு வர காரணமாக இருந்தவர், தனுஷ். ஆனால், இவர்கள் இருவரும் இப்போது பேசிக்கொள்வதில்லை என கூறப்படுகிறது. 

Amaran2/8

Amaran

தீபாவளியை முன்னிட்டு, அமரன், பிரதர், லக்கி பாஸ்கர், ப்ளடி பெக்கர் என 4 படங்கள் வெளியானது. இதில், அமரன் படம் தமிழகத்தில் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த படத்தை, தமிழ் பிரபலங்கள் அனைவரும் பாராட்டியிருக்கின்றனர். 

Amaran3/8

Amaran

அமரன் திரைப்படம், வெளியான 3 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. பலரும் இதற்கு வரவேற்பு கொடுக்க, சில பிரபலங்கள் இது குறித்து பேசாமல் இருக்கிறது. 

Venky Atluri4/8

Venky Atluri

தனுஷ், கடந்த ஆண்டு வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்தார். தற்போது அவர் இயக்கத்தில்தான் லக்கி பாஸ்கர் படம் வெளியாகியிருக்கிறது. 

Vaathi5/8

Vaathi

வாத்தி படம் தமிழ் ரசிகர்களிடமும் தெலுங்கு ரசிகர்களுடமும் நல்ல வரவேற்பை பெற்றது. 

Vaathi6/8

Vaathi

வெங்கி அட்லூரி இயக்கத்தில் இவர் ஏற்கனவே நடித்திருப்பதால், அவர் இயக்கத்தில் தற்போது வெளியான லக்கி பாஸ்கர் படத்தை இவர் பாராட்டியிருப்பதாக கூறப்படுகிறது. 

Lucky Baskhar7/8

Lucky Baskhar

லக்கி பாஸ்கர் படத்தில், துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்திருக்கிறார். 

SK Dhanush8/8

SK Dhanush

இன்னும் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை தனுஷ் பார்க்காமல் இருப்பதால் அவர் அதை பாராட்டாமல் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.