கங்குவா படம் எப்படி? கம்-பேக் கொடுத்தாரா சூர்யா? ட்விட்டர் X விமர்சனம்!
Latest Kanguva Twitter X Review : சூர்யா நடிப்பில் நவம்பர் 14ஆம் தேதியான இன்று, கங்குவா திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம், தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் அதிகாலையிலேயே திரையிடப்பட்டிருக்கிறது.
Latest Kanguva Twitter X Review : நடிகர் சூர்யாவின் திரை வாழ்க்கையில், பெரிய படமாக உருவாகி இருக்கிறது கங்குவா திரைப்படம். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தை, ஸ்டுடியோ கிரீன்ஸ் கே.ஈ.ஞானவேல் ராஜா இயக்கியிருக்கிறார். ரிலீஸிற்கு முன்னரே பல தடைகளை சந்தித்த இப்படம், ஒரு வழியாக வெற்றி பெற்றதா? இங்கு அது குறித்து பார்ப்போம்.
கங்குவா திரைப்படம்:
கடந்த இரண்டு ஆண்டுகளாக சூர்யா ஹீரோவாக நடித்த படங்கள் எதுவுமே திரையரங்குகளில் வெளியாகவில்லை. அவர் கேமியோ ரோல்களில் நடித்த படங்கள் மட்டுமே வெளியாகின. இந்த நிலையில், அவர் திரை வாழ்க்கையில் பெரிய படமாக உருவாகி இருக்கிறது கங்குவா. கோலிவுட்டின் முக்கிய இயக்குநராக விளங்கும் சிறுத்தை சிவா, இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இது, சூர்யாவிற்கு கம்-பேக் கொடுக்கும் படமாக அமையுமா? என்பது குறித்த கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது. இதற்கு பதிலாக படம் பார்த்த சிலர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் விமர்சனங்களை தெரிவித்திருக்கின்றனர்.
கோலிவுட்டில் நல்ல படம்..
ரசிகர்களை கவரும்படி கோலிவுட்டில் நல்ல படமாக கங்குவா ரிலீஸ் ஆகியிருப்பதாக, ஒரு ரசிகர் தெரிவித்திருக்கிறார்.
— Kingsley (@CineKingsley) November 14, 2024
இதை மாற்ற ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஏதேனும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கும் அவர், இசை மிக்ஸிங்கில் சொதப்பியது ஏன்? என் தேவி ஸ்ரீ பிரசாத்திடம் கேள்வி கேட்டிருக்கிறார்.
இரண்டாம் பாதி ஓகே!!
கங்குவா படத்தை பார்த்த பலர், முதல் பாதியை விட இரண்டாம் பாதி நன்றாக இருப்பதாக விமர்சனங்களில் தெரிவித்திருக்கின்றனர்.
— Avanthika (@Avanthi0919) November 14, 2024
கங்குவா படத்திற்கு, தமிழகத்தை விட ஆந்திராவில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஞானவேல் ராஜா, போட்ட பணத்தை வசூல் செய்து விடுவார் என சிலர் கூறி வருகின்றனர். ஒரு சிலர், வேண்டுமென்றே இப்படத்திற்கு நெகடிவ் விமர்சனத்தை கொடுத்து கொண்டிருக்கின்றனர். கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், இப்படம் குடும்பத்துடன் சென்று பார்க்கும் படி இருப்பதாக விமர்சகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | “கங்குவா படத்தில் குறையே இல்லை!” படம் பார்த்தவர் சொன்ன விமர்சனம்!
மேலும் படிக்க | ‘‘கங்குவா படத்தைப் பார்த்தால் மிரண்டு போவீர்கள்’’- சூர்யா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ